தன் நெஞ்சே தன்னைச் சுடுவதால் விஜய்க்கு வெளியே வர பயம்; துரைமுருகன்

வேலூர்: தன் நெஞ்சே தன்னைச் சுடும் என்ற காரணத்தினால், விஜய்க்கு வெளியே வர பயம் என அமைச்சர் துரைமுருகன் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
வேலூரில் நிருபர்கள் சந்திப்பில், கேள்விகளுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
நிருபர்: கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களிடம் தவெக தலைவர் விஜய் வீடியோ அழைப்பில் ஆறுதல் கூறி இருக்கிறார்?
துரைமுருகன் பதில்: தான் குற்றம் புரியவில்லை என்றால், தைரியமாக விஜய் தன் தோழர்களோடு துயர சம்பவம் ஏற்பட்ட வீடுகளுக்கு போயிருக்க முடியும். தன் நெஞ்சே தன்னைச் சுடும் என்ற காரணத்தினால், அவருக்கு வெளியே வர பயம். எனவே வீடியோ காலில் பேசுகிறார்.
நிருபர்: கச்சத்தீவு தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து இருக்கிறாரே?
இதற்கு, "அவருக்கு ஒன்றும் தெரியாது, யாரோ சொல்லிக் கொடுத்து, இவர் பேசி வருகிறார்" என துரைமுருகன் பதில் அளித்து விட்டு, சிறிது நேரம் சிரித்த பிறகு காரில் புறப்பட்டு சென்றார்.












