கரூர் சம்பவத்தில் நீதிபதி குறித்து அவதூறு: ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கைது

சென்னை: கரூர் சம்பவம் தொடர்பாக விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வரதராஜன் என்பவரை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
கரூரில் நடிகர் விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தி பரப்புபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. அவர்களை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து வருகின்றனர். அவர்களில் யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு மற்றும் மாரிதாஸ் ஆகியோர் முக்கியமானவர்கள். பெலிக்ஸ் ஜெரால்டை சிறையில் அடைக்க நீதிபதி மறுத்துவிட்டார். மாரிதாசை விசாரணைக்கு பிறகு விடுவித்த போலீசார், தேவைப்படும் போது மீண்டும் ஆஜராகும்படி கூறியிருந்தனர்.
இதனிடையே கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது ஐகோர்ட் நீதிபதி செந்தில்குமார், இச்சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவு பிறப்பித்தார். விசாரணையின் போது தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுக்கு தலைமை பண்பு இல்லை'என கருத்து தெரிவித்து இருந்தார்.
நீதிபதியின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் சிலர் ஆதரவாகவும், சிலர் அவதூறு பரப்பும் வகையிலும் கருத்து தெரிவித்தனர். இந்த விமர்சனங்களை புன்னகையுடன் புறந்தள்ள வேண்டும் என நீதிபதி கூறியிருந்தார்.
அதேநேரத்தில் சமூக வலைதளங்களில் நீதிபதி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக நான்கு பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், நீதிபதி குறித்து விமர்சித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதாக ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வரதராஜன் என்பவரை சென்னை தெற்கு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
இவர் நேதாஜி மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி ஒன்றை நடத்தி வருகிறார். அவ்வப்போது சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து இருந்தார்.










மேலும்
-
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும்; கணித்துச் சொன்னது உலக வங்கி!
-
ஹரியானாவில் ஏடிஜிபி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
-
தமிழகத்தில் யானைகள் எண்ணிக்கை அதிகரிப்பு
-
மருத்துவமனையில் இருந்து ராமதாஸ் டிஸ்சார்ஜ்
-
அமெரிக்கர்களின் பசிப்பிணி போக்கும் எல்மண்ட்ஸ் புட் பேங்க்
-
தன் நெஞ்சே தன்னைச் சுடுவதால் விஜய்க்கு வெளியே வர பயம்; துரைமுருகன்