ஜல்லிக்கட்டு காளை முட்டி இளைஞர் ஒருவர் பலி
புதுக்கோட்டை:
விராலிமலை அருகே பாப்பாபட்டியில் ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை ஏட்டுத்தெருவைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் பிரவீன், 17, இவர் தனது நண்பர்களுடன் ஜல்லிக்கட்டு காளை வாங்குவதற்காக, நேற்று விராலிமலை அருகே பாப்பாபட்டி பகுதியில் விவசாயி, பரமசிவம் என்பவரின் வீட்டிற்கு ஜல்லிக்கட்டு காளையை பார்க்க சென்றுள்ளார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக, ஜல்லிக்கட்டு காளை பிரவீனை முட்டியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த பிரவினை அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் பிரவீனை சோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இச்சம்பவம் குறித்து, விராலிமலை போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை செய்து, வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமர் மோடிக்கு அதிகாரம் பொருட்டல்ல; மக்கள் சேவையை பாராட்டிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்
-
சைபர் தாக்குதலுக்கு ஆளாகும் பெண்கள் வீடியோக்களை எளிதில் அகற்ற வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு
-
கோவில் மற்றும் ஆதின சொத்துகளை ஆக்கிரமிப்பதை நிறுத்த வேண்டும்; அண்ணாமலை எச்சரிக்கை
-
ஹிமாச்சல்லில் பஸ் கவிழ்ந்து 18 பேர் உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்
-
பீஹார் முதல்வர் வேட்பாளரா தேஜஸ்வி: காங்கிரஸ் ஏற்க மறுப்பு
-
கத்தரிக்கோலால் பெண் ஆடையை வெட்டிய 'சில்மிஷ' இளைஞர் கைது
Advertisement
Advertisement