பீஹார் முதல்வர் வேட்பாளரா தேஜஸ்வி: காங்கிரஸ் ஏற்க மறுப்பு

2

பாட்னா: தேஜஸ்வி யாதவ் ஆர்ஜேடி கட்சியின் முதல்வராக இருக்கலாம். ஆனால், ' இண்டி ' கூட்டணி இன்னும் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்யவில்லை என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதனால் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


பீஹார் சட்டசபைக்கு வரும் நவ.,6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.ஓட்டு எண்ணிக்கை நவ.14 ல் நடக்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் ஆளும் பாஜ கூட்டணி விரைவில் கூடி தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்ய உள்ளனர். வேட்பாளர்கள் குறித்து தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு நாளை கூட உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்தே, இண்டி கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆர்ஜேடி கட்சி தலைவர் தேஜஸ்வி தான் முதல்வர் வேட்பாளர் என அக்கட்சி கூறி வருகிறது. இது குறித்து மற்ற கூட்டணி கட்சிகள் எந்த கருத்தும் சொல்லாமல் இருந்தன.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் உதித் ராஜ் கூறியதாவது: தேஜஸ்வி, ஆர்ஜேடியின் முதல்வர் முகமாக இருக்கலாம். ஆனால், இண்டி கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து ஒன்று கூடி பேசி முடிவு எடுக்கப்படும். எந்த கட்சியாவது முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளதா? இண்டி கூட்டணியும் முதல்வர் வேட்பாளர் குறித்து தேர்வு செய்யவில்லை. காங்கிரஸ் மேலிடம் என்ன முடிவு எடுக்கிறது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement