முதியவரை கொலை செய்த நண்பர் சிறையிலடைப்பு

திருவாரூர்:மன்னார்குடி அருகே, முதியவர் கொலை வழக்கில் விவசாய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே, வடபாதி கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள், 62. இவர் மீது, பல வழக்குகள் உள்ளன. இவரும், அதே ஊரைச் சேர்ந்த ஹரிஹரன், 40, என்பரும் நண்பர்கள். இருவரும், 4ம் தேதி, வடபாதியில் உள்ள, அய்யனார் கோவில் அருகில் மது அருந்தினர்.


அப்போது, 'அய்யனார் கோவிலை என் குடும்பத்தினர் தான் கட்டினர்' என, ஹரிஹரன் கூறியுள்ளார். இதற்கு, 'கிராமத்தில் வசூல் செய்து கட்டிய கோவில்' என, கலியபெருமாள் கூறியுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியதையடுத்து, முதியவர் மார்பில், ஹரிஹரன் உதைத்துள்ளார். அவர், அந்த இடத்தில் கிடந்த கற்கள் மீது விழுந்து இறந்துள்ளார்.
அவர் விழுந்தவுடன், வீட்டிற்கு வந்த ஹரிஹரன், குடிபோதையில் வீட்டின் பின்பக்கம் படுத்து துாங்கியுள்ளார். நேற்று முன்தினம் காலை எழுந்த ஹரிஹரன், கலியபெருமாள் இறந்ததை அறியாமல், வெளியூருக்கு வேலைக்கு சென்று விட்டார்.
விசாரித்த தலையாமங்கலம் போலீசார், ஹரிஹரனை கைது செய்தனர்.

Advertisement