அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் போராட்டம்
திருச்சி : திருச்சி அருகே விவசாயம் செய்யவிடாமல் அதிகாரிகள் தடுப்பதாக, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் தரையில் படுத்து போராடினர்.
திருச்சி மாவட்டம், பாப்பாக்குறிச்சியில், 31 ஏக்கர் வக்ப் வாரியத்துக்கு சொந்தமான இடத்தில், பல ஆண்டுகள் அப்பகுதியைச் சேர்ந்த, 24 விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில், அவர்களை 'விவசாயம் செய்யக்கூடாது' என, வக்ப் வாரிய அதிகாரிகள் தடுத்துள்ளனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், நேற்று காலை, திருச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர். மனுவை வாங்கிய அதிகாரிகள், வக்ப் வாரிய அதிகாரிகளை கேட்டு சொல்லவதாக கூறி உள்ளனர்.
அதை கேட்காத அவர்கள், கூட்ட அரங்கில், தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கூட்டத்துக்கு வந்த கலெக்டர் சரவணன், இப்பிரச்னைக்கு, 48 மணி நேரத்தில் தீர்வு காணப்படும் என்று விவசாயிகளிடம் உறுதி அளித்தார். அதன்பேரில், விவசாயிகள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.
மேலும்
-
பிரதமர் மோடிக்கு அதிகாரம் பொருட்டல்ல; மக்கள் சேவையை பாராட்டிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்
-
சைபர் தாக்குதலுக்கு ஆளாகும் பெண்கள் வீடியோக்களை எளிதில் அகற்ற வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு
-
கோவில் மற்றும் ஆதின சொத்துகளை ஆக்கிரமிப்பதை நிறுத்த வேண்டும்; அண்ணாமலை எச்சரிக்கை
-
ஹிமாச்சல்லில் பஸ் கவிழ்ந்து 18 பேர் உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்
-
பீஹார் முதல்வர் வேட்பாளரா தேஜஸ்வி: காங்கிரஸ் ஏற்க மறுப்பு
-
கத்தரிக்கோலால் பெண் ஆடையை வெட்டிய 'சில்மிஷ' இளைஞர் கைது