சீட்டு விளையாடிதை தட்டிக்கேட்டதில் தகராறு: ஆசிட் வீசியதில் 4 பேர் காயம்

1

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் சீட்டு விளையாடிதை தட்டிகேட்டதில் ஏற்பட்ட தகராறில் ஆசிட் வீசியதில் பெண் உட்பட 4 பேர் காயமடைந்தனர்

திண்டுக்கல் பெரியப்பள்ளப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன் 55. இவர் தனது வீட்டின் அருகே நண்பர்கள் சிலருடன் சீட்டு விளையாடினர். இதை பக்கத்து வீட்டை சேர்ந்த தோல்ஷாப் தொழிலாளி மகேந்திரன் தட்டிக்கேட்டுள்ளார். இதில் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த மகேந்திரன் வீட்டில் தொழிலுக்காக வைத்திருந்த ஆசிட்டை வீசியதில் லட்சுமணன், ராஜா 41, சென்ராயன் 60, உறவினர் லட்சுமி 48, உட்பட நான்கு பேர் படுகாயமடைந்தனர். மகேந்திரனை திண்டுக்கல் தாலுகா போலீசார் கைது செய்தனர்.

Advertisement