அமன் ஷெராவத்திற்கு தடை ஏன்

புதுடில்லி: மல்யுத்த வீரர் அமன் ஷெராவத்துக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
குரோஷியாவில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் சமீபத்தில் நடந்தது. ஆண்களுக்கான பிரீஸ்டைல் 57 கிலோ பிரிவில் இந்தியா சார்பில் பாரிஸ் ஒலிம்பிக்கில் (2024) வெண்கலம் வென்ற அமன் ஷெராவத் பங்கேற்க இருந்தார்.
போட்டிக்கு முந்தைய எடை சோதனையில் 1.7 கிலோ எடை கூடுதலாக இருப்பது தெரியவர, அமன் ஷெராவத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யு.எப்.ஐ.,) சார்பில், கடந்த செப். 23ல் கேட்கப்பட்ட விளக்கத்துக்கு, செப். 29ல் பதில் தந்தார்.
இது திருப்தி தராத நிலையில் டபிள்யு.எப்.ஐ., அமைப்பு, அமன் ஷெராவத்திற்கு, ஒரு ஆண்டு தடை விதித்தது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை:
உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு 18 நாள் முன், குரோஷியா சென்றீர்கள். எடையை குறைக்க போதிய கால அவகாசம் இருந்தது. ஆனால் தகுதி நீக்கம் செய்யப்பட்டீர்கள். எடை அதிகமானது குறித்த உங்களது விளக்கத்தை, ஒழுங்கு நடவடிக்கை குழு ஆய்வு செய்தது. தலைமை, துணை பயிற்சியாளர்களிடமும் விளக்கம் பெறப்பட்டன.
பதில் திருப்தி தராத நிலையில், உங்களுக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்படுகிறது. தடை காலத்தில், தேசிய, உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க கூடாது. மல்யுத்தம் தொடர்பான எவ்வித நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக் கூடாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
மத்திய அரசு தரும் நிதியை சுருட்டுவதுதான் திராவிட மாடலா?: நயினார் நாகேந்திரன்
-
எனது மகனை அடித்து சித்ரவதை செய்கின்றனர்: வேலூர் இப்ராஹிம் கதறல்
-
மாஜி எம்.பி., வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
-
ஐ.ஜி.,யை சந்தித்த கரூர் கலெக்டர்
-
தொட்டியில் வீசப்பட்ட குழந்தையின் உடல் மீட்பு கொடுங்கையூரில் அதிர்ச்சி
-
அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு கைரேகையால் சிக்கிய திருடர்கள்