கோவை - நாகர்கோவில் ரயில் இயக்கத்தில் மாற்றம்

கோவை: திண்டுக்கல் - மதுரை ரயில் பாதையில், அம்பாத்துரை, கொடை ரோடு ரயில்வே ஸ்டேஷனில் மேம்பாட்டு பணிகள் நாளை மற்றும் 13ம் தேதி நடக்க உள்ளன. அதனால், கோவை - நாகர்கோவில் (16322) எக்ஸ்பிரஸ் ரயில், நாளை, 13ம் தேதி திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும்.

திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே இயக்கப்படாது என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே முன்பதிவற்ற சிறப்பு ரயில் இயக்கப்படும். அந்த ரயில் திண்டுக்கல்லில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement