தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு: ஒரு சவரன் ரூ.91,200க்கு விற்பனை

சென்னை: சென்னையில் இன்று (அக் 09) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.91,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,400க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகஅளவில் முதலீடு செய்து வருவதால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதனால், நம் நாட்டில் தங்கம் விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (அக் 07), ஆபரண தங்கம் கிராம் 11,200 ரூபாய்க்கும், சவரன் 89,600 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம் 167 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று (அக் 08) காலை, தங்கம் விலை கிராமுக்கு 100 ரூபாய் உயர்ந்து, 11,300 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து, 90,400 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. நேற்று மதியம், மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து, 11,385 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 680 ரூபாய் அதிகரித்து, எப்போதும் இல்லாத வகையில் 91,080 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து, 170 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று (அக் 09) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.91,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,400க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.91 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் தொட்டுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.171க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வாசகர் கருத்து (1)
அப்பாவி - ,
09 அக்,2025 - 09:51 Report Abuse

0
0
Reply
மேலும்
-
பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது; சதித்திட்டம் முறியடிப்பு
-
தேர்தல் ஆணையத்திற்கு 7 கேள்வி; கேட்கிறார் சிதம்பரம்
-
கோவையில் ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு முதல் குற்றவாளி ரவுடி நாகேந்திரன் உயிரிழப்பு
-
மும்பையில் பிரதமர் மோடி -பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் சந்திப்பு
-
கோவையில் புத்தொழில் மாநாடு துவக்கம்; 40 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு
Advertisement
Advertisement