முன்னாள் மத்திய அமைச்சர் ராஜினாமா: அசாம் பாஜவில் பரபரப்பு

திப்ருகர்: முன்னாள் மத்திய அமைச்சரும், அசாம் பாஜ மூத்த தலைவருமான ராஜேன் கோஹைன் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
ராஜேன் கோஹைன், அசாமின் நாகோன் பார்லிமென்ட் தொகுதியில் 1999 முதல் 2019 வரை நான்கு முறை எம்பியாகவும், 2016 முதல் 2019 வரை மத்திய ரயில்வே இணை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இவர் இன்று பாஜவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ராஜேன் கோஹைன் மாநில பாஜ தலைவர் திலீப் சைகியாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாகவும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாகவும்,அசாம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கட்சி தவறியதாலும், வெளியாட்களை மாநிலத்தில் குடியேற அனுமதிப்பதன் மூலம் பழங்குடி சமூகங்களுக்கு துரோகம் இழைத்ததாலும் தான் ராஜினாமா செய்கிறேன்.
இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.
மேலும்
-
கரூர் செல்ல விஜய் அனுமதி வாங்குவது எதற்கு: அண்ணாமலை கேள்வி
-
போலீஸ் விசாரணையில் தப்பிய இளைஞர் மரணம்
-
கல்வியாளர்கள் முதல் டாக்டர்கள் வரை: வேட்பாளர்களாக களமிறக்கினார் பிரசாந்த் கிஷோர்
-
அது ஒரு முடிந்து போன அத்தியாயம்; வழக்கறிஞர் தாக்குதல் முயற்சி குறித்து தலைமை நீதிபதி கவாய் கருத்து
-
தமிழக காவல்துறையில் இடஒதுக்கீடு முறையாக செயல்படுத்தப்பட்டதா: விசாரணை வேண்டும் என்கிறார் அன்புமணி
-
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வியக்க வைக்கிறது: பிரிட்டன் பிரதமர் பெருமிதம்