இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வியக்க வைக்கிறது: பிரிட்டன் பிரதமர் பெருமிதம்

புதுடில்லி: '' இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வியக்க வைக்கிறது. பிரதமர் மோடி தலைமையில், 2047ல் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி இந்தியா முன்னேறுவதைப் பார்க்க முடிகிறது,'' என பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.
அரசு முறை பயணமாக பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் நேற்று மஹாராஷ்டிரா தலைநகர் மும்பை வந்தடைந்தார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். தொடர்ந்து இன்று அவரை பிரதமர் மோடி சந்தித்து இரு தரப்பு உறவுகள், வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார். இதன் பிறகு இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன் பிறகு பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவின் பொருளாதார மற்றும் நிதி தலைநகரில் பிரதமர் மோடியைச் சந்தித்தது முக்கியமானது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வியக்க வைக்கிறது. 2028-க்குள் இந்தியாவை உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற முயற்சிக்கும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். 2047-க்குள் முற்றிலும் வளர்ந்த நாடு என்ற உங்களின் கொள்கை நிச்சயம் நிறைவேறும். அதனை நான் இங்கு பார்க்கிறேன். உங்களின் பயணத்தில் நாங்கள் ஒரு கூட்டாளியாக இருக்க விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (7)
பேசும் தமிழன் - ,
09 அக்,2025 - 18:54 Report Abuse

0
0
Reply
ஆரூர் ரங் - ,
09 அக்,2025 - 18:43 Report Abuse

0
0
Reply
Rajah - Colombo,இந்தியா
09 அக்,2025 - 18:21 Report Abuse

0
0
Reply
Vasan - ,இந்தியா
09 அக்,2025 - 17:59 Report Abuse

0
0
Reply
Mr Krish Tamilnadu - ,இந்தியா
09 அக்,2025 - 17:54 Report Abuse

0
0
Thravisham - Bangalorw,இந்தியா
09 அக்,2025 - 18:47Report Abuse

0
0
Mr Krish Tamilnadu - ,இந்தியா
09 அக்,2025 - 19:27Report Abuse

0
0
Reply
மேலும்
-
சைபர் குற்றங்களில் பிற மாநிலங்களை முந்திய தமிழகம் 3 ஆண்டுகளில் 1,759 பேர் சிக்கினர்
-
பா.ஜ.,வுடன் கைகோர்த்து தேர்தல் கமிஷன்வாக்காளர்கள் பட்டியலில் தில்லுமுல்லு சட்டசபை காங்., தலைவர் குற்றச்சாட்டு
-
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் தமிழகம் முதலிடம்
-
கோவையில் 10.1 கி.மீ., மேம்பாலம் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
-
ரூ.3 ஆயிரம் லஞ்சம்; மின் அதிகாரி கைது
-
கருத்தரங்கு
Advertisement
Advertisement