கல்வியாளர்கள் முதல் டாக்டர்கள் வரை: வேட்பாளர்களாக களமிறக்கினார் பிரசாந்த் கிஷோர்

9


பாட்னா: முன்னாள் துணைவேந்தர், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்களை வேட்பாளராக ஜன்சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் களமிறக்கியுள்ளார்.

பீஹார் சட்டசபைக்கு நவ., 6 மற்றும் 11ல் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டுகள் 14ம் தேதி எண்ணப்படுகின்றன. தேர்தல் பணிகளில் ஒவ்வொரு கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.


இந்த சட்டசபை தேர்தலில் முதல்முறையாக களமிறங்கும் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி முதலாவது நபராக வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.
மொத்தம் 243 தொகுதிகள் உள்ள நிலையில் முதற்கட்டமாக 51 தொகுதிகளுக்கு வேட்பாளரை பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.


அவர்களில் பெரும்பாலானோர் முன்னாள் துணைவேந்தர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி, வழக்கறிஞர், நடிகர்கள், டாக்டர் இடம்பெற்றுள்ளனர்.


பாட்னா பல்கலை துணைவேந்தர் மற்றும் நாலந்தா திறந்தவெளி முன்னாள் துணைவேந்தர் கேசி சின்ஹா, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆர்கே மிஸ்ரா, மூத்த வழக்கறிஞர் ஒய்வி கிரி, போஜ்புரி நடிகர் ரிதேஷ் பாண்டே மற்றும் டாக்டர்கள் உள்ளிட்ட பலர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

Advertisement