தென்னிந்தியாவின் முதன்மையான உணவு பதார்த்தம்: இட்லியை கொண்டாடும் டூடுல்!

நமது நிருபர்
தென்னிந்திய உணவு வகைகளில் முதன்மையான இடத்தை கொண்டுள்ள இட்லியை கொண்டாடும் வகையில் கூகுள் இன்று டூடுல் வெளியிட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் அவ்வப்போது ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்களில் சிறப்பு டூடுலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், இன்று கூகுள் வெளியிட்டுள்ள டூடுல் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றே சொல்லலாம். அதற்கு காரணம் நமது கலாசார உணவினை பிரபலப்படுத்துகிறது.
அரிசி மற்றும் உளுந்தம் பருப்பில் இருந்து தயாரிக்கப்படும் சுவையான, வேகவைத்த தென்னிந்தியாவின் உணவான இட்லியை கொண்டாடும் வகையில் டூடுல் வெளியிட்டு இருக்கிறது கூகுள். அந்த அனிமேஷனில் 'கூகிள்' என்ற வார்த்தை இட்லி, சாம்பார் மற்றும் சட்னியைப் பயன்படுத்தி பொறிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவின் சமையல் கலாசாரத்தில் இட்லிக்கு முதன்மையான இடம் உண்டு. பண்டிகை நாட்களில் இந்திய குடும்பங்களில் தவிர்க்க முடியாத உணவு பதார்த்தமாக இட்லி இருக்கிறது.இட்லி, பாரம்பரியமாக அரிசி மற்றும் உளுந்தம் பருப்பில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.
வயிற்றுக்கு இதமான உணவு பதார்த்தமான இட்லி, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்தது. அவற்றின் ஆவியில் வேக வைக்கும் தயாரிப்பு முறை, கொழுப்பைக் குறைக்கிறது. இதனால் ஆரோக்கிய உணவுகளை விரும்பி சாப்பிடும் உணவு பிரியர்களிடையே இட்லிகள் மிகவும் பிடித்தமானவையாக உள்ளன.
கருத்து சொல்லுங்க!
உங்களுக்கு இட்லி பிடிக்குமா? நீங்கள் எப்பொழுது எல்லாம் இட்லியை விரும்பி, ருசித்து சாப்பிடுவீர்கள் என்று உங்களது கருத்துக்களை கமென்ட் செய்யுங்கள் மக்களே!











மேலும்
-
அமேதியில் ராகுலை போல ரகோபூரில் தேஜஸ்வி தோற்பார்; பிரசாந்த் கிஷோர் கணிப்பு!
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் திடீர் திருப்பம்; பாலஸ்தீன முக்கிய தலைவரை விடுவிக்க மறுத்த இஸ்ரேல்
-
மேற்கு வங்கத்தில் மீண்டும் அதிர்ச்சி; மருத்துவமனையில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை
-
மகளிர் உரிமைத் தொகையா? தேர்தல் அச்சாரத் தொகையா? நயினார் நாகேந்திரன் கேள்வி
-
இன்று 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்: 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
-
வேளாண் வளர்ச்சிக்காக ரூ.35 ஆயிரம் கோடி திட்டம்: தொடங்கி வைத்தார் மோடி