அமெரிக்காவில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவில், வெடிமருந்து ஆலையில் ஏற்பட்ட விபத்தில், 18 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் டென்னிசி கிராமப்புறத்தில் ஒரு ராணுவ வெடிமருந்து ஆலை செயல்பட்டு வருகிறது. அங்கு திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பல மைல்களுக்கு அப்பால் உள்ள வீடுகளையும் உலுக்கியது. இந்த விபத்தில் ஒரு கட்டடம் இடிந்து தரைமட்டம் ஆனது.
இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். இடிந்த தரைமட்டமான கட்டடங்களில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. ''நாங்கள் எங்களது வீடு இடிந்து விழுந்தது போல் உணர்ந்தோம். பெரிய வெடி சத்தம் கேட்டது'' என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் என டென்னிசி கவர்னர் பில் லீ தெரிவித்தார். அவர், இந்த துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்யுமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார்.









மேலும்
-
அமேதியில் ராகுலை போல ரகோபூரில் தேஜஸ்வி தோற்பார்; பிரசாந்த் கிஷோர் கணிப்பு!
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் திடீர் திருப்பம்; பாலஸ்தீன முக்கிய தலைவரை விடுவிக்க மறுத்த இஸ்ரேல்
-
மேற்கு வங்கத்தில் மீண்டும் அதிர்ச்சி; மருத்துவமனையில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை
-
மகளிர் உரிமைத் தொகையா? தேர்தல் அச்சாரத் தொகையா? நயினார் நாகேந்திரன் கேள்வி
-
இன்று 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்: 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
-
வேளாண் வளர்ச்சிக்காக ரூ.35 ஆயிரம் கோடி திட்டம்: தொடங்கி வைத்தார் மோடி