தவெகவுடன் கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி: திருமா புகார்

35

திருச்சி: தவெகவுடன் விசிக கூட்டணி என்பது அதிமுக தரப்பில் பரப்பும் வதந்தி என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் விசிக - தவெக கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு திருமாவளவளன் அளித்த பதில்: இது ஒரு யூகமான கேள்வி. தவெகவுடன் விசிக கூட்டணி என்பது அதிமுக தரப்பில் பரப்பும் வதந்தி. அவர்கள் ஏற்கனவே பாஜ உடன் கூட்டணியில் இருக்கிற போது, தமிழக வெற்றிக்கழகம் அந்த அணிக்கு எப்படி வரும் என்ற கேள்வி எழுகிறது.


ஏனென்றால், விஜய் பாஜ எங்களது கொள்கை எதிரி என்று ஏற்கனவே அறிவித்து இருக்கிறார். அப்படி என்றால் பாஜ, அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் கூட்டணியில் இருக்குமா? அல்லது பாஜவை கழற்றி விட்டு விட்டு, அதிமுக வெளியேறுவதற்கு தயாராக இருக்கிறதா? என்ற இன்னொரு கேள்வியும் எழுகிறது.



எனவே அதிமுக தலைமை ஒரு கூட்டணிக்கு கூட நம்பக தன்மை உடைய ஒரு கட்சியா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. பாஜவை கழற்றி விட்டு, அதன் பின்னர் தவெக உடன் கூட்டணி வைக்க அவர்கள் தயாராக இருக்கிறார்களா என்ற இந்த கேள்வி எழும் போது, அதிமுக மீதான நம்பகத்தன்மையும் கேள்விக்குறி ஆகுகிறது. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Advertisement