ஆபரணத்தங்கம் இன்றைய விலை சவரன் 92 ஆயிரம் ரூபாய்!

சென்னை: ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை ஒரு சவரன் 92,000 ரூபாய். இன்று மட்டுமே ஒரு சவரன் 1280 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த விலை, ஒரு புதிய உச்சமாகும்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை முன் எப்போதும் இல்லாத அளவு உயர்ந்து கொண்டே வருகிறது. கிட்டத்தட்ட 9 நாட்களில் மட்டுமே (அக்.2 முதல் அக்.10 வரை காலை நிலவரப்படி) சவரனுக்கு 3100 ரூபாய் அதிகரித்தது.

அக்.2ம் தேதி ஒரு சவரன் விலை 87,600 ரூபாயாக இருந்து அதன் பின்னர் படிப்படியாக உயர்ந்து கொண்டே சென்றது. நேற்றைய தினம் (அக்.10) மட்டுமே சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து 90,720 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மற்றைய நாட்களில் எல்லாம் தங்கத்தின் விலை உயர்விலேயே இருந்தது.

இன்றைய தினம் காலையில், வர்த்தக நேர தொடக்கத்தில் ஒரு சவரன் 680 ரூபாய் உயர்ந்து, 91400 ரூபாய்க்கு விற்பனையானது. மாலை மீண்டும் புதிய உச்சத்தை தங்கம் விலை எட்டியது. மாலையில் சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்து 92,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இது, இதுவரை இல்லாத விலை உயர்வாகும்.

கிராம் 75 ரூபாய் அதிகரித்து 11,500 ரூபாய் ஆகவும், சவரன் 600 ரூபாய் உயர்ந்து 92,000 ரூபாயாகவும் உள்ளது. வெள்ளி விலையும் புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து 190 ரூபாய்க்கு விற்பனையாகிறது. காலையிலும் கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து காணப்பட்டது.

Advertisement