போதை மாத்திரைகள் வைத்திருந்த 4 பேர் கைது

விழுப்புரம்; விழுப்புரம், செஞ்சியில் போதை மாத்திரைகள், ஊசி வைத்திருந்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மேற்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராபர்ட் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பழைய பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த இருவரிடம் விசாரணை செய்தனர். அப்போது, அவர்கள், விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவை சேர்ந்த செல்வகுமார் மகன் சதா(எ)சதா பவகர்ணன்,19; வழுதரெட்டியை சேர்ந்த மனோகரன் மகன் மகேஷ்,20; என தெரியவந்தது. அவர்களிடம் 10 போதை மாத்திரைகள், ஊசிகள் இருந்தது கண்டறியப்பட்டு, போலீசார் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.
மற்றொரு சம்பவம் செஞ்சி இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார், அம்மாக்குளம் ஏரிக்கரை அருகே ரோந்து சென்ற போது சந்தேகப்படும் படியாக நின்றிருந்த இருவரிடம் விசாரணை செய்தனர். அதில், அவர்கள் சென்னை, குன்றத்துாரை சேர்ந்த வெங்கடேசன் மகன் ராஜ்(எ)கோவிந்தராஜ்,25; செஞ்சி, அம்மாகுளத்தை சேர்ந்த தனசேகர் மகன் அன்பரசன்,22; என்பது தெரியவந்தது. அவர்களிடம் 17 போதை மாத்திரைகள், ஊசிகள் இருந்து கண்டறியப்பட்டது. அவைகளை போலீசார் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.
மேலும்
-
தங்கத்துடன் போட்டி போட்டு எகிறும் வெள்ளி விலை; ஒரே நாளில் ரூ.5000 அதிகரிப்பு
-
ஒரே ஆண்டில் சரணடைந்த 1,000 மாவோயிஸ்ட்டுகள்
-
வரிவிதிப்பை கடுமையாக எதிர்த்த சீனா; இறங்கி வந்தார் டிரம்ப்!
-
இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்; சென்னையில் மருந்து ஆய்வாளர் வீட்டில் ரெய்டு
-
ஏ.ஐ., காரணமாக 20 லட்சம் பேர் வேலை பறிபோகக் கூடும்; நிடி ஆயோக் அறிக்கையில் தகவல்
-
வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த தீவிரம்; இந்தியா - அமெரிக்கா இடையே பேச்சு