ஒரே ஆண்டில் சரணடைந்த 1,000 மாவோயிஸ்ட்டுகள்

புதுடில்லி: இதுவரை இல்லாத வகையில் 2025ம் ஆண்டில் மட்டும் 1,000க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்டுகள் சரணடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் மாவோயிஸ்ட்டுகள் முழுவதுமாக ஒழிக்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி பூண்டுள்ளார். மேலும், மாவோயிஸ்ட்கள் சரணடையா விட்டால், ஆயுதங்கள் மூலமாகத் தான் பதிலளிக்கப்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
இதையடுத்து, மாவோயிஸ்ட்டுகள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, போலீசாரிடம் சரணடைந்து வருகின்றனர். மேலும், சரணடைய மறுக்கும் மாவோயிஸ்ட்டுகளை வேட்டையாடுவதற்காக, சிறப்பு படைகளும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், 2025ம் ஆண்டில் மட்டும் சுமார் 1,040 மாவோயிஸ்ட்டுகள் சரணடைந்துள்ளதாக போலீசார் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இது இதுவரை இல்லாத அளவு எண்ணிக்கையாகும்.
கடந்த 2020ம் ஆண்டில் 344 பேரும், 2021ல் 544 பேரும், 2022ல் 417 பேரும், 2023ல் 414 பேரும் சரணடைந்துள்ளனர். மத்திய, மாநில படைகளின் அதிரடி நடவடிக்கையின் காரணமாக, இது கடந்த இரு ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. 2024ம் ஆண்டு 881 மாவோயிஸ்ட்டுகளும், 2025ல் 1,040 மாவோயிஸ்ட்டுகளும் சரணடைந்துள்ளனர்.
மாவோயிஸ்ட்டுகளை ஒழிக்க மத்திய அரசு நிர்ணயித்துள்ள காலக்கெடு இன்னும் 6 மாதங்கள் கூட இல்லாத நிலையில், இந்தாண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே மூத்த மாவோயிஸ்ட்டுகள் சிலர் இந்த வாரத்தில் சரணடைய இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. நவ.,1ம் தேதி மாநில தினத்தையொட்டி, பிரதமர் மோடி சத்தீஸ்கர் வருவதற்கு முன்பாக அவர்கள் சரணடைய இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.



மேலும்
-
அக்டோபர் 14 முதல் 17ம் தேதி வரை 4 நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர்: சபாநாயகர் அப்பாவு
-
இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுவிக்கும் பணி தொடக்கம்: 20 பேர் பெயர் லிஸ்ட் ரிலீஸ்; 7 பேர் விடுவிப்பு!
-
நேபாள சிறையில் இருந்து கைதிகள் 13,000 பேர் தப்பியோட்டம்
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
தங்கத்துடன் போட்டி போட்டு எகிறும் வெள்ளி விலை; ஒரே நாளில் ரூ.5000 அதிகரிப்பு
-
வரிவிதிப்பை கடுமையாக எதிர்த்த சீனா; இறங்கி வந்தார் டிரம்ப்!