வரிவிதிப்பை கடுமையாக எதிர்த்த சீனா; இறங்கி வந்தார் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்கா சீனாவிற்கு உதவ விரும்புகிறது, அதற்கு தீங்கு விளைவிக்க விரும்பவில்லை என 100% வரி விதித்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். இந்த கூடுதல் வரிவிதிப்பு வரும், நவ., 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அவர் தெரிவித்து இருந்தார்.
இதனால், சீனப் பொருட்களுக்கான வரி விதிப்பு ஏற்கனவே உள்ள 30 சதவீதத்துடன், தற்போதைய 100 சதவீதத்தையும் சேர்த்து 130 சதவீதமாக அதிகரித்தது. இதற்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
"அமெரிக்கா தன்னிச்சையான இரட்டை நிலைபாட்டை கடைபிடிக்கிறது. எதிர் நடவடிக்கை எடுப்போம். சீனா போராட விரும்பவில்லை. ஆனால் போராட பயப்படவில்லை" என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருந்தது.
அந்தர் பல்டி
இந்நிலையில் அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சீனாவை பற்றி கவலைப்பட தேவையில்லை. மிகவும் மதிக்கப்படும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு ஒரு மோசமான தருணம் ஏற்பட்டது. அமெரிக்கா சீனாவிற்கு உதவ விரும்புகிறது, அதற்கு தீங்கு விளைவிக்க விரும்பவில்லை. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.









மேலும்
-
அக்டோபர் 14 முதல் 17ம் தேதி வரை 4 நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர்: சபாநாயகர் அப்பாவு
-
இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுவிக்கும் பணி தொடக்கம்: 20 பேர் பெயர் லிஸ்ட் ரிலீஸ்; 7 பேர் விடுவிப்பு!
-
நேபாள சிறையில் இருந்து கைதிகள் 13,000 பேர் தப்பியோட்டம்
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
தங்கத்துடன் போட்டி போட்டு எகிறும் வெள்ளி விலை; ஒரே நாளில் ரூ.5000 அதிகரிப்பு
-
ஒரே ஆண்டில் சரணடைந்த 1,000 மாவோயிஸ்ட்டுகள்