பெண்ணிடம் செயின் பறிப்பு ஆசாமிக்கு போலீஸ் வலை

பண்ருட்டி; பெண்ணிடம் செயின் பறித்த ஆசாமியை போலீ சார் தேடி வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த அரசடிக்குப்பம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் தேவர். இவரது மனைவி வனிதா,50; இவர் அரசடிக் குப்பம் அங்கன்வாடி மையத்தில் சத்துணவு அமைப்பாளராக உள்ளார்.

நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் தனக்கு சொந்தமான மாடுகளை அரசடிக்குப்பம் - காட்டுப்பாளையம் சாலையில் உள்ள முந்திரி காட்டில் இருந்து வீட்டிற்கு ஓட்டி வந்தார்.

அப்போது மர்ம நபர் பின் தொடர்ந்து வந்து, வனிதாவின் கழுத்தில் இருந்த நான்கரை சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார்.

இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் வனிதா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

Advertisement