பித்தளை பாத்திரங்களை  திருடிய வாலிபர் கைது

விருத்தாசலம்; மங்கலம்பேட்டை அருகே பித்தளை பாத்திரங்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணி யில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, விருத்தாசலம் பாலக்கரை வழியாக இருசக்கர வாகனத்தில் பித்தளை பாத்திரங்களை மூட்டை கட்டி வந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

அவர், பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் காந்திநகர் காலனி, செல்வம் மகன் வீரகண்டமணி, 40, என்பது தெரியவந்தது.

மங்கலம்பேட்டை பகுதியில் வீடுகளின் புகுந்து பித்தளை பாத்திரங்களை திருடியதை ஒப்புக் கொண்டார். மேலும், மங்கலம்பேட்டை அடுத்த தொட்டிக்குப்பம் பகுதியில் 5 வீடுகளில் பித்தளை அண்டா, குடங்களை திருடியது தெரிந்தது.

மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து , வீரகண்டமணியை கைது செய்தனர்.

Advertisement