வீடியோ மற்றும் போட்டோகிராபர் சங்க நிர்வாகிகள் தேர்வு

மதுரை: தமிழ்நாடு வீடியோ மற்றும் போட்டோகிராபர்ஸ் அசோசியேசனுக்கான மாநில தேர்தல் கடந்த அக்.,08ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்றது. அதில் மதுரை மாவட்ட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் ஒ.கே.பிரேம்லால் மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இவர் 2028 வரை பதவியில் இருப்பார்.

இதற்கான பாராட்டுவிழா, மதுரை மாவட்ட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் சார்பாக மதுரையில் நடைபெற்றது. இதில் சங்க உறுப்பினர்களும், மாநில இணைச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கே.செந்தில்குமரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Advertisement