'பீம்' செயலியில் பாதுகாப்பாக பணம் அனுப்ப புதிய வசதிகள்

சென்னை:''பீம் பேமென்ட்ஸ்' செயலியில் விரைவாகவும், பாதுகாப்பாகவும் பணம் அனுப்புவதற்கு, முக அடையாளம், விரல் ரேகை வாயிலாக ஒப்புதல் அளிக்கும் வசதி செயல்படுத்தப்பட்டு உள்ளது,'' என, நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா பீம் சர்வீசஸ் நிறுவன நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான லலிதா நட்ராஜ் தெரிவித்தார்.

சென்னையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பீம் பேமென்ட்ஸ் மொபைல் போன் செயலி, 2016ல் அறிமுகம் செய்யப்பட்டது. மொபைல் போன் செயலி வாயிலாக, செலவு செய்யும் போது பலரும் அதிகம் செலவு செய்கின்றனர்.

பீம் செயலியின் நோக்கமே பணத்திற்கு மதிப்பு அளிக்கும் வகையில், 'யோசித்து பார்த்து செலவு செய்யுங்க' என்பது தான்.

எளிமை, புதிய சேவை கள், புதுமை ஆகியவற்றால், பீம் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துஉள்ளது.

பீம் செயலி பயனர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வெளியில் சாப்பிடும் போதும், நண்பர்களுடன் சேர்ந்து குழுவாக பொருட்களை வாங் குவது, வாட கையை பகிர்வது என பயனர்கள் செலவுகளை பிரித்து, நேரடியாக பணம் செலுத்தும் வசதியை அனுமதிக்கிறது.

'பேமிலி மோட்' வசதி வாயிலாக, செயலியில் குடும்ப உறுப்பினர்களை சேர்க்கலாம். அதில் குடும்ப செலவுகளை கண்காணிக்கும் வசதி உள்ளது. செலவு பகுப்பாய்வு வசதி வாயிலாக ஒரு பயனரின் மாத செலவுகளை கண்காணிக்க முடியும். அவசியம் இல்லாத செலவுகளை தவிர்க்க முடியும்.

'யு.பி.ஐ., சர்க்கிள்' வசதி வாயிலாக, ஒரு முதன்மை கணக்கு வைத்திருப்பவர், ஐந்து இரண்டாம் நிலை பயனர்கள் கணக்கில் இருந்து பணம் செலுத்தும் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள, அவர்களை அங்கீகரிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

Advertisement