ஜம்மு - காஷ்மீர் முதலீட்டாளர்கள் 10 மடங்கு அதிகரிப்பு: என்.எஸ்.இ.,

மும்பை:கடந்த 10 ஆண்டுகளில், ஜம்மு-காஷ்மீரில் தேசிய பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து என்.எஸ்.இ., வெளியிட்ட புள்ளி விபரம்:

கடந்த 2015ம் ஆண்டு, ஜம்மு-காஷ்மீரில் இருந்து தேசிய பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்கள் எண்ணிக்கை 65,000 ஆக இருந்தது. 2025ல் இது 6.51 லட்சம் பேராக, அதாவது 10 மடங்கு அதிகரித்துள்ளது.

தேசிய அளவில் முதலீட்டாளர் எண்ணிக்கை, 2015ல் 1.79 கோடியாகவும், 2025ல் 11.28 கோடியாகவும் உயர்ந்துள்ளது. இது 6.20 மடங்கு அதிகம் என்ற நிலையில், இதைவிட ஜம்மு காஷ்மீர் முதலீட்டாளர்கள் எண்ணிக்கை விகிதம் உயர்ந்துள்ளது.
Latest Tamil News
நாடு முழுதும் அனைவரையும் உள்ளடக்கிய நிதி சேவை வளர்ச்சி மற்றும் முறையான பங்குச்சந்தை வர்த்தகத்தின் மீது ஏற்பட்டுள்ள நம்பிக்கையே இதற்கு காரணம்.

@block_B@ புதிய முதலீட்டாளர்கள் (ஜம்மு - காஷ்மீர் ) மே 7,500 ஜூன் 8,400 ஜூலை 10,010 *** மொத்த முதலீட்டாளர்கள் டாப் 5 மாநிலங்கள் மாநிலம் முதலீட்டாளர் மஹாராஷ்டிரா 1.90 கோடி உத்தர பிரதேசம் 1.40 கோடி குஜராத் 1 கோடி மேற்கு வங்கம் 0.70 கோடி ராஜஸ்தான் 0. 68 கோடிblock_B

Advertisement