ஹிந்தியை தடை செய்யும் மசோதா வெறும் வதந்தி அல்ல; சொல்கிறார் அண்ணாமலை

சென்னை: 'தமிழகத்தில் ஹிந்தியை தடை செய்யும் மசோதாவை தாக்கல் செய்ய திமுக அரசு திட்டமிட்டது வெறும் வதந்தி அல்ல. இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல்,' என்று பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் ஹிந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. ஆனால், இந்தத் தகவலுக்கு தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், அப்படி எந்தவொரு மசோதாவுக்கான முன்மொழிவும் பெறப்படவில்லை என்று சட்டசபை செயலர் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஹிந்தியை தடை செய்யும் மசோதாவை தாக்கல் செய்ய திமுக அரசு திட்டமிட்டதுவெறும் வதந்தி அல்ல என்று பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை; தமிழகத்தில் ஹிந்தியை தடை செய்யும் மசோதாவை தாக்கல் செய்ய திமுக அரசு திட்டமிட்டது வெறும் வதந்தி அல்ல. இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல். திமுக தொண்டர்கள் வழக்கம் போல, ஹிந்தி எழுத்துக்களை எரிப்பதும், ஹிந்தி மொழியை கருப்பு மை வைத்து அழிப்பதும் போன்ற வழக்கமான நாடகங்களை தொடங்கி விட்டனர்.

சட்டசபையில் ஹிந்தியை தடை செய்யும் மசோதாவை தடை செய்யும் தகவலை அறிந்து நேற்று பொள்ளாச்சியில் திமுகவினர் ஹிந்தி எழுத்துக்களை எரித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இயல்பாகவே பிளவுபட்டுள்ள இண்டி கூட்டணி, ஊழலில் மட்டும் ஒன்றுபட்டுள்ளது, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement