பட்டாசு கடை அமைக்க 282 பேருக்கு அனுமதி

நாமக்கல்: மாவட்டத்தில் பட்டாசு கடைகள் அமைக்க, 282 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வரும், 20ல், தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும், உற்றார் உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்பு வழங்கியும், மகிழ்ச்சியை பரிமாறி கொள்வர்.
சிறுவர்களுக்கு தேவையான கம்பி மத்தாப்பு, சங்கு சக்கரம், பெரியவர்களுக்கு வெடி வகைகளும் தருவிக்கப்பட்டு, விற்பனை செய்வர். அதற்காக, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று பட்டாசு கடைகள் அமைக்கப்படுகிறது. குறிப்பாக, எவ்வித பாதிப்பும் ஏற்படாத இடங்களில் கடை அமைத்து, பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், பட்டாசு கடை வைக்க, 345 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவற்றை ஆய்வு செய்ததில், 57 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது.
மேலும், 6 விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. இறுதியில், 282 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement