சேதமான சாலை: வாகன ஓட்டிகள் அவதி
வெண்ணந்துார்: வெண்ணந்துார் யூனியன், நெ.3.கொமராபாளையம் பஞ்., அண்ணாமலைப்பட்டி, கோம்பைக்காடு ஆகிய மலை கிராம பகுதிகளுக்கு செல்ல, ராசிபுரம் - ஆட்டையாம்பட்டி நெடுஞ்சாலை, தச்சன் காடு பகுதியில் இருந்து நாள்தோறும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. காலை, மாலை ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
தற்போது, பெய்த மழையால், மலைப்பாதையில் சாலையின் பல பகுதியில் அரிப்பு ஏற்பட்டு, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'எப்போது மழை பெய்தாலும், இந்த மலை கிராம பகுதிகளுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக மாறிவிடும்.
பின், பஞ்., நிர்வாகத்தினர் சாலையை செப்பனிடுகின்றனர். மீண்டும் மழை பெய்தால், மீண்டும் சாலை சேதமடையும்.
எனவே, தச்சன் காடு பகுதியில் இருந்து கோம்பை காடு மலைப்பாதை வரை, புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும்' என்றனர்.
மேலும்
-
காசாவில் போர் முடிவடையாது: சொல்கிறார் இஸ்ரேல் பிரதமர்
-
கேரளாவை அச்சுறுத்தும் அமீபா தொற்று; 17 நாளில் 41 பேர் பாதிப்பு
-
'தினமலர்' செய்தித்தாள் அல்ல... அது ஒரு கலைக்களஞ்சியம்
-
என்னை ஒரு எழுத்தாளராக உருமாற்றம் செய்த 'தினமலர்' நாளிதழை மூச்சுள்ள வரை மறவேன்
-
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
-
நாளை தீபாவளி; சென்னையில் இருந்து 3 நாட்களில் 6 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்