சென்னையில் இருந்து பெங்களூரு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: பயணிகள் அவதி

சென்னை: சென்னையில் இருந்து பெங்களூரு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
சென்னையில் இருந்து பெங்களூருக்கு பயணிகள் 109 பேர் உடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாரானது. விமானத்தில் விமானி கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை கண்டறிந்தார். இதனால் விமானம் நிறுத்தப்பட்டது.
விமானத்தில் தொழில்நுட்ப கோளாறை நிபுணர்கள் சரி செய்த பிறகு சென்னையில் இருந்து விமானம் புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் 109 பேர் தப்பினர்.
விமானம் வழக்கமான நேரத்தை விட தாமதமாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். விமானத்தில் அண்மைகாலமாக, விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருவது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த அக் 17ம் தேதி, இத்தாலியின் மிலன் நகரில் இருந்து டில்லிக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதால், தீபாவளிக்கு சொந்த ஊர் வர இருந்த இந்திய பயணிகள் கடும் அவதி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.








மேலும்
-
உலகப் புகழ்பெற்ற பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் திருட்டு: பழங்கால நகைகளுடன் கொள்ளையர்கள் ஓட்டம்
-
திமுக ஆட்சியில் கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்: இபிஎஸ் குற்றச்சாட்டு
-
போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய சம்பவம்; காங்., எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு
-
வெள்ளி வென்றார் தான்வி: உலக ஜூனியர் பாட்மின்டனில்
-
உலக விளையாட்டு செய்திகள்
-
மெஸ்ஸி 'ஹாட்ரிக்': மயாமி வெற்றி