வெள்ளி வென்றார் தான்வி: உலக ஜூனியர் பாட்மின்டனில்

கவுகாத்தி: உலக ஜூனியர் பாட்மின்டனில் இந்தியாவின் தான்வி வெள்ளி வென்றார்.
அசாமின் கவுகாத்தியில், உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் தான்வி சர்மா, தாய்லாந்தின் அன்யாபட் பிசித்பிரீச்சசக் மோதினர். முதல் செட்டை 7-15 என இழந்த தான்வி, 2வது செட்டை 12-15 என கோட்டைவிட்டார்.
மொத்தம் 28 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய தான்வி, 7-15, 12-15 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்துடன் ஆறுதல் அடைத்தார். உலக ஜூனியர் பாட்மின்டன் அரங்கில், அபர்ணா போபட் (1996), செய்னா நேவல் (2006), சிறில் வர்மா (2015), சங்கர் முத்துசாமிக்கு பின் (2022) வெள்ளி வென்ற 5வது இந்தியரானார் தான்வி. தவிர இது, 17 ஆண்டுகளுக்கு பின் இத்தொடரின் பெண்கள் ஒற்றையரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் ஆனது. கடைசியாக 2008ல் செய்னா தங்கம் வென்றிருந்தார்.
மேலும்
-
நவ.,15ல் தண்ணீர் மாநாடு; அறிவித்தார் சீமான்
-
கின்னஸ் சாதனை படைத்த அயோத்தி தீப உற்சவம்; 26 லட்சம் தீபம் ஏற்றி கொண்டாட்டம்
-
மருமகளை உயிருடன் எரித்த வழக்கு: 60 வயது மாமியாருக்கு ஆயுள் தண்டனை
-
அடுத்தவாரம் அனல் பறக்க போகுது பீஹார் தேர்தல் களம்: அக் 24ல் பிரசாரம் தொடங்குகிறார் மோடி!
-
நாளை தீபாவளி பண்டிகை கோலாகலம்: தலைவர்கள் வாழ்த்து
-
மத்திய அரசின் பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைகிறது கேரளா