உலக விளையாட்டு செய்திகள்

கனடா வீராங்கனை கலக்கல்
ஒசாகா: ஜப்பான் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பைனலில் கனடாவின் லெய்லா பெர்ணான்டஸ் 6-0, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் செக்குடியரசின் டெரேசா வாலென்டோவாவை வீழ்த்தி கோப்பை வென்றார். இது, இவரது 5வது டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பட்டம் ஆனது.
கொலம்பியா 3வது இடம்
சான்டியாகோ: சிலியில், 20 வயதுக்கு உட்பட்டோருக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் 3-4வது இடத்துக்கான போட்டியில் கொலம்பியா, பிரான்ஸ் அணிகள் மோதின. கொலம்பிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 3வது இடத்தை கைப்பற்றியது.
தென் ஆப்ரிக்கா ஆதிக்கம்
இஸ்மாயிலியா: எகிப்தில், ஆப்ரிக்க கோப்பை ஹாக்கி தொடர் நடந்தது. ஆண்களுக்கான பைனலில் தென் ஆப்ரிக்க அணி 5-1 என்ற கோல் கணக்கில் எகிப்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது. பெண்களுக்கான பைனலில் தென் ஆப்ரிக்க அணி 4-0 என, கானாவை வென்று சாம்பியன் பட்டம் வென்றது.
பிரான்ஸ் அணி முன்னேற்றம்
ஜடார்: குரோஷியாவில் நடக்கும் ஐரோப்பிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் அரையிறுதியில் பிரான்ஸ் அணி 3-1 என்ற கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் ருமேனியா அணி 3-0 என, சுலோவேனியாவை தோற்கடித்தது.
எக்ஸ்டிராஸ்
* இலங்கை தலைநகர் கொழும்புவில், பெண்களுக்கான ஆசிய எமிரேட்ஸ் செவன்ஸ் சீரிஸ் ரக்பி தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் யு.ஏ.இ., இந்தோனேஷியாவை வீழ்த்திய இந்திய அணி, ஜப்பானிடம் தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
* சீனாவில் நடந்த நிங்போ ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பைனலில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 3-6, 6-0, 6-2 என ரஷ்யாவின் எகடரினாவை வீழ்த்தி சாம்பியன் ஆனார்.
* சவுதி அரேபியாவில் நடந்த சிக்ஸ் கிங்ஸ் ஸ்லாம் கண்காட்சி டென்னிஸ் போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர் 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரசை வீழ்த்தினார்.
* ஆஸ்திரேலியாவில் நடந்த உலக டிரையத்லான் சாம்பியன்ஷிப் பைனலில் அசத்திய ஜெர்மனி வீராங்கனை லிசா டெர்ட்ச் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
மேலும்
-
நவ.,15ல் தண்ணீர் மாநாடு; அறிவித்தார் சீமான்
-
கின்னஸ் சாதனை படைத்த அயோத்தி தீப உற்சவம்; 26 லட்சம் தீபம் ஏற்றி கொண்டாட்டம்
-
மருமகளை உயிருடன் எரித்த வழக்கு: 60 வயது மாமியாருக்கு ஆயுள் தண்டனை
-
அடுத்தவாரம் அனல் பறக்க போகுது பீஹார் தேர்தல் களம்: அக் 24ல் பிரசாரம் தொடங்குகிறார் மோடி!
-
நாளை தீபாவளி பண்டிகை கோலாகலம்: தலைவர்கள் வாழ்த்து
-
மத்திய அரசின் பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைகிறது கேரளா