வாய்ப்பை எதிர்நோக்கி குல்தீப் * இரண்டாவது போட்டியில்...

புதுடில்லி: இந்திய அணியில் பேட்டிங், பவுலிங் என 'ஆல் ரவுண்டர்' திறமை கொண்ட வீரர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இதனால் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அணியில் இடம் பெற முடியாமல் தவிக்கிறார்.
இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 30. இதுவரை 113 ஒருநாள் போட்டியில் 181 விக்கெட் சாய்த்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் 3 ஒருநாள் போட்டியில் (3 விக்.,) விளையாடியுள்ளார். இருப்பினும் முதல் போட்டியில் இவர் சேர்க்கப்படவில்லை.
காரணம் என்ன
இந்திய அணி பயிற்சியாளர் காம்பிர் வருகைக்குப் பின், அணியில் 'ஆல் ரவுண்டர்களுக்கு' முக்கியத்துவம் தரப்படுகிறது. எட்டாவது இடத்தில் களமிறங்கும் வீரர் வரை, பேட்டிங்கில் ரன் சேர்த்தாக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.
இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் குல்தீப் சேர்க்கப்படவில்லை. நிதிஷ் குமார், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் என 3 'ஆல் ரவுண்டர்கள்' இடம் பெற்றனர். இது இரண்டாவது போட்டியிலும் (அக். 23, அடிலெய்டு) தொடரும் என நம்பப்படுகிறது.
ஆனால் இது சரியான அணித் தேர்வு தானா என கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் பேட்டிங்கில் உதவுவார் என்பதால் வாஷிங்டன் சுந்தர் (முதல் போட்டியில் 10 ரன், 2 ஓவரில் 1 விக்.,) சேர்க்கப்படுகிறார். ஆனால் இவர், முதலில் ரன்களை கட்டுப்படுத்தி, பின் விக்கெட் வீழ்த்துவார். ஆனால் இடது கை மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளரான குல்தீப், எப்போதும் தாக்குதல் பாணியில் பவுலிங் செய்வார். இவரை கணித்து விளையாடுவது, பேட்டர்களுக்கு சிரமம்.
எனினும் இரண்டாவது போட்டி நடக்கவுள்ள அடிலெய்டு மைதானத்தில் பவுண்டரி எல்லை குறைவான துாரத்தில் உள்ளால், குல்தீப் விளையாடுவது 'ரிஸ்க்' ஆக இருக்கலாம். இறுதி முடிவு கேப்டன் சுப்மன் கில், பயிற்சியாளர் காம்பிர் கையில் உள்ளது.
முதன் முறையல்ல...
குல்தீப்பை அணியில் சேர்ப்பது குறித்து ஏற்படும் குழப்பம், காம்பிர் பயிற்சியாளராக வந்த பின் மட்டுமல்ல, ரவி சாஸ்திரி, டிராவிட் இருந்த போதும், இப்படித் தான் நடந்தன.
முன்னாள் 'சுழல்' வீரர் அஷ்வின் கூறுகையில்,'' நான் நன்றாக பவுலிங் செய்கிறேன், இருப்பினும் அணியில் விளையாடவில்லை. ஆனால் அணியின் தோல்விக்கு நான் தான் காரணமா என குல்தீப் நினைக்கலாம். இதுபோன்ற சூழலை அனைவராலும் கையாள முடியாது. போராட தேவையான தைரியத்தை பலர் இழந்து விடுவர்,'' என்றார்.
மேலும்
-
ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தி.மு.க., அறிவித்த மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை கிடைக்குமா?
-
அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்
-
வெடிகுண்டு தயாரித்தவர் கைது 250 கிலோ வெடிமருந்து பறிமுதல்
-
பள்ளி இடைநிற்றலை தடுக்க புதிய வாகனங்கள் அறிமுகம் பிற மலை கிராமங்களுக்கும் கூடுதல் வசதி செய்ய வலியுறுத்தல்
-
கடம்பூர், குன்றி, ஆசனுாரில் விடியவிடிய கனமழை திம்பம் மலைப்பாதையில் மண் சரிவு; போக்குவரத்து துண்டிப்பு
-
பவானி ஆற்றில் வெள்ளம்: கொடிவேரியில் 2வது நாளாக தடை