வெடிகுண்டு தயாரித்தவர் கைது 250 கிலோ வெடிமருந்து பறிமுதல்
வேலுார், வேலுார் அருகே வீட்டில் பட்டாசு, நாட்டு வெடிகுண்டு தயாரித்தவரை போலீசார் கைது செய்து, 250 கிலோ வெடிமருந்துகளை பறிமுதல் செய்தனர்.
வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வல்லாண்டராமம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ், 38. இவர், கடந்த, 4 ஆண்டுகளுக்கு முன், செதுவாலை பகுதியில் பட்டாசு கடை நடத்தி வந்தார். பின்னர் பட்டாசு கடை நடத்துவதை கைவிட்டு வீட்டிலேயே பட்டாசு, பாணம், சக்தி வாய்ந்த நாட்டு வெடிகுண்டு தயாரித்து விற்பனை செய்து வந்தார்.
@block_G@block_G
வீட்டிலேயே பட்டாசு
கள் தயாரிப்பது குறித்து தகவலறிந்த அணைக்கட்டு தாசில்தார் சுகுமார் தலைமையிலான வருவாய்த்துறையினர், நேற்று முன்தினம் இரவு சதீஷ் வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டிலேயே தயாரித்து விற்பனைக்கு வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகள், பாணங்கள், பட்டாசுகள் மற்றும், 250 கிலோ வெடி மருந்துகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து, பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீைஷ கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
'கருப்பு தீபாவளி' வாழ்த்து போஸ்டர் ஒட்டிய துாய்மை பணியாளர்கள் கைது
-
அஜய் ரஸ்தோகியை சந்திக்கிறது விஜய் தரப்பு; நடந்ததை விவரித்து ஆதாரங்களை அளிக்க முடிவு
-
அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்கள் மழையால் பாதிப்பு
-
நடிகர் விஜய் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட வேண்டும் கஸ்துாரி
-
இடுக்கி அணை நீர்மட்டம் உயர்வு
-
வெளிநாடு செல்ல தி.மு.க.வினருக்கு தடை