ஒவ்வொரு நாட்டிலும் சுதேசி வருகிறது: ஸ்ரீதர் வேம்பு

சென்னை: '' இந்தியாவில் மட்டும் சுதேசி வரவில்லை. ஒவ்வொரு நாட்டிலும் வருகிறது. இதில் முதலில் விழித்துக் கொண்டது சீனா தான்,'' என ஸோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: எவ்வளவு காசு கொடுத்தாலும் முக்கிய தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு கொடுக்க மாட்டோம் என்ற நிலை உள்ளது. அதனால் அந்த தொழில்நுட்பத்தை நாம் உருவாக்க வேண்டும். நமக்கு மூளை இருக்கிறது. அதை ஏன் உருவாக்கக்கூடாது. அரட்டை செயலியை அதிகம் பயன்படுத்துவது கிராமப் பகுதியினர் தான்.
நம்மிடம் திறமை உள்ளது . இந்தியாவில் அதிகளவு குழந்தைகள் பிறக்கின்றன.சீனா, அமெரிக்காவை விட அதிகம். இவர்களுக்கு எல்லாம் வேலைவாயப்பு என்றால் தொழில்நுட்பத்தை உருவாக்குவது தான் வேலை.
நம்மிடம் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான நிதி குறைவாக உள்ளது. அதில் ஜிடிபியில் 0.7 சதவீதம் உள்ளது. ஆனால் சீனாவில் அதிகம். வளர்ச்சியடைந்த நாடுகளில் 4 சதவீதம் இருக்கும். இதை தனியார் நிறுவனங்கள் செய்ய வேண்டும். அரட்டை போன்ற செயலியை அரசு உருவாக்க முடியாது. தனியார் தான் செய்ய வேண்டும். அதற்கு ஆராய்ச்சி தேவை.
அமித்ஷா உள்ளிட்டவர்கள் இணைந்தது அங்கீகாரமாக பார்க்கிறோம். அரட்டைக்கு வரும் அதிகளவு டிராபிக்கை தாங்க வேண்டும். அதனை சரி செய்துவிட்டோம். 5 கோடி 10 கோடி வந்தால் கூட தாங்கும் அளவுக்கு சரி செய்துள்ளோம்.
பயனர்கள் வர வர பிரச்னைகளை சரி செய்து வருகிறோம். இந்தியாவில் மட்டும் சுதேசி வரவில்லை. ஒவ்வொரு நாட்டிலும் வருகிறது. இதில் முதலில் விழித்துக் கொண்டது சீனா தான்.அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டு வரும் நாடாக மாறியுள்ளது. அதை நாமும் செய்ய வேண்டும். சீனா போன்ற நிலையை அடைய 10 ஆண்டுகள் ஆகும். சில தொழில்நுட்பத்தை அடைய 15 ஆண்டுகள் ஆகும். நாம் தவறான பொருளாதார வல்லுநர்கள் பேச்சை கேட்டோம். சீனா கேட்கவில்லை. தொழில்நுட்பம் வரும் போது விலை குறையும். யுடியூபர்கள் இன்று அதிகம். 30 ஆண்டுக்கு முன்பு யாரும் எப்படி எதிர்பார்க்கவில்லை. ஏஐ தொழில்நுட்பத்தால் வேறு வகையான மாற்றம் ஏற்படும். புது விதமான வேலைகள் உருவாகும். இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு கூறினார்.


மேலும்
-
ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தி.மு.க., அறிவித்த மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை கிடைக்குமா?
-
அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்
-
வெடிகுண்டு தயாரித்தவர் கைது 250 கிலோ வெடிமருந்து பறிமுதல்
-
பள்ளி இடைநிற்றலை தடுக்க புதிய வாகனங்கள் அறிமுகம் பிற மலை கிராமங்களுக்கும் கூடுதல் வசதி செய்ய வலியுறுத்தல்
-
கடம்பூர், குன்றி, ஆசனுாரில் விடியவிடிய கனமழை திம்பம் மலைப்பாதையில் மண் சரிவு; போக்குவரத்து துண்டிப்பு
-
பவானி ஆற்றில் வெள்ளம்: கொடிவேரியில் 2வது நாளாக தடை