மக்களுடன் நின்றோம் என்பதை நிரூபிக்க வேண்டும்: உதயநிதி பேச்சு

சென்னை: ''இந்த மழையில் மக்களோடு நாம் நின்றோம் என்பதை நாம் நிரூபித்துக்காட்ட வேண்டும்,'' என துணை முதல்வர் உதயநிதி பேசினார்.
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், திமுகவினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.சென்னை திருவள்ளூர்,காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்றுடன் முடிவடையவில்லை.இன்னும் இரண்டு நாள் கழித்து இன்னொரு மழை வரப்போகிறது என வானிலை மையம் கூறியுள்ளது
வலுவடைய வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது. சென்ற முறையை விட அதிகமாக மழை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அப்படி ஒரு சூழ்நிலை வந்தால், நாம் எப்படி சேர்ந்து எதிர்கொள்ள வேண்டும். மக்களை எப்படி பாதுகாப்பது என்பதற்காக தான் இந்தக்கூட்டம்.
நான் செல்லும் போது சில இடங்களில் தொடர் மழை காரணமாக தண்ணீர் தேங்கியுள்ளது.ஒரு மணி நேரம் மழை விட்டு வெயில் அடித்தால் ஆங்காங்கே வடிந்து விடுகிறது. சில இடங்களில் நிற்கும் போது மக்கள் வந்து கூப்பிடுகின்றனர். வந்து பாருங்கள் என்கின்றனர்.அப்போது கோபத்தோடு கூப்பிடவில்லை.
சிரித்த முகத்தோடு தான் கூப்பிடுகினறனர்.வந்து பாருங்கள். நீங்கள் வந்து பார்த்தால் எல்லாம் சரியாகிவிடும் என்கின்றனர்.
நமது அரசு முதல்வர் கவனத்துக்கு இந்த பிரச்னை போனால், முதல்வர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார். நிச்சயம் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். இருக்கக்கூடிய வட்ட செயலாளர், கவுன்சிலர் இந்த பணிகளில் ஈடுபடுவார் என்ற நம்பிக்கையில் மக்கள் நம்மை அழைத்துச் செல்கின்றனர்.
இந்த மழையில் மக்களோடு நாம் நின்றோம் என்பதை நாம் நிரூபித்துக்காட்ட வேண்டும். இவ்வாறு உதயநிதி பேசினார்.







மேலும்
-
'லெப்டினன்ட் கர்னல்' நீரஜ் சோப்ரா * இந்திய ராணுவத்தில் கவுரவம்
-
கபடி: பைனலில் இந்திய பெண்கள் * ஆசிய யூத் விளையாட்டில்...
-
சுப்ரீம் கோர்ட் அமைத்த சிறப்பு குழுவில் தமிழக ஐ.பி..எஸ்.,கள்
-
கட்டாய வெற்றி நோக்கி இந்தியா * நியூசிலாந்துடன் இன்று மோதல்
-
அடிலெய்டில் பதிலடி தருமா இந்தியா * ஆஸி.,யுடன் இன்று இரண்டாவது மோதல்
-
விண்வெளியில் லட்சக்கணக்கான மக்கள் வசிப்பார்கள்: ஜெப் பெஜோஸ் கணிப்பு