சுப்ரீம் கோர்ட் அமைத்த சிறப்பு குழுவில் தமிழக ஐ.பி..எஸ்.,கள்

சென்னை : கரூர் சம்பவ விசாரணை தொடர்பாக, உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள சிறப்பு குழுவில், தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சுமித் சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில், கடந்த செப்., 27ல், த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்றி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விசாரணையை கண்காணிக்க, உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் சிறப்பு குழுவையும் நியமித்து உள்ளது. இதில், வெளி மாநிலங்களைச் சேர்ந்த, தமிழக கேடர் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இருவர் இடம்பெறுவர் என்றும் கூறியுள்ளது.
இந்நிலையில், அஜய் ரஸ்தோகி தலைமையிலான சிறப்பு குழுவில், கூடுதல் டி.ஜி.பி.,க்களான, எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரியும் சோனல் மிஸ்ரா, சி.ஆர்.பி.எப்., எனும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணிபுரியும் சுமித் சரண் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த சுமித் சரண், கோவை போலீஸ் கமிஷனர், நெல்லை டி.ஐ.ஜி., உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் பணிபுரிந்தவர். சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சோனல் மிஸ்ரா, ஈரோடு மாவட்ட எஸ்.பி., உள்ளிட்ட பொறுப்புகளில் பணிபுரிந்தவர்.
மேலும்
-
மழையில் அடித்து செல்லப்பட்ட 3 லட்சம் சவுக்கு நாற்றுகள்
-
மழையால் கோவில் கோபுரம் இடிந்தது
-
கடலுார், மரக்காணம், கள்ளக்குறிச்சியில் கனமழைக்கு 4 பெண்கள் பரிதாப பலி
-
வீடூர் அணை நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றம்
-
மேல்மலையனுாரில் ஊஞ்சல் உற்சவம்: கொட்டும் மழையிலும் குவிந்த பக்தர்கள்
-
விழுப்புரம் மாவட்டத்தில் 10 செ.மீ., மழை : 10 வீடுகள், மின் கம்பங்கள் சேதம்