உகாண்டாவில் கோர விபத்து : 46 பேர் உயிரிழப்பு

கம்பாலா: உகாண்டாவில் இரண்டு பஸ்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் 46 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உகாண்டா உள்ளிட்ட கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் சாலைகள் பொதுவாக குறுகியதாகவே இருக்கிறது. இதனால் அங்கு அடிக்கடி விபத்து நிகழ்கிறது. உயிரிழப்புகளும் அதிகமாக உள்ளது. அங்கு சாலை விபத்துகளில் கடந்த 2023 ல் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் கடந்த ஆண்டு மட்டும் இறந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது.
இந்நிலையில் உகாண்டாவின் கிர்யான்டோங்கோ என்ற இடத்தில் குறுகிய சாலையில் எதிரெதிர் திசையில் இரண்டு பஸ்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது, இரண்டு பஸ்களும் முன்பு சென்ற வாகனங்களை முந்தி செல்ல முயன்ற போது நேருக்கு நேர் மோதிக் கொண்டன. அ தில் அந்த வாகனங்களும் மோதின.
இந்த சம்பவத்தில், 46 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முதலில், படுகாயமடைந்தவர்கள் சிலர் மயக்கமடைந்ததால் அவர்களை இறந்தவர்களின் கணக்கில் சேர்த்து 63 பேர் உயிரிழப்பு என போலீசார் அறிவித்தனர். இதன் பிறகு அவர்களை பரிசோனை செய்ததில் சிலர் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை 46 என போலீசார் அறிவித்துள்ளனர்.

மேலும்
-
'லெப்டினன்ட் கர்னல்' நீரஜ் சோப்ரா * இந்திய ராணுவத்தில் கவுரவம்
-
கபடி: பைனலில் இந்திய பெண்கள் * ஆசிய யூத் விளையாட்டில்...
-
சுப்ரீம் கோர்ட் அமைத்த சிறப்பு குழுவில் தமிழக ஐ.பி..எஸ்.,கள்
-
கட்டாய வெற்றி நோக்கி இந்தியா * நியூசிலாந்துடன் இன்று மோதல்
-
அடிலெய்டில் பதிலடி தருமா இந்தியா * ஆஸி.,யுடன் இன்று இரண்டாவது மோதல்
-
விண்வெளியில் லட்சக்கணக்கான மக்கள் வசிப்பார்கள்: ஜெப் பெஜோஸ் கணிப்பு