சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்எல்ஏ பொன்னுசாமி காலமானார்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்எல்ஏ பொன்னுசாமி இன்று காலமானார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏ பொன்னுசாமி. இவருக்கு வயது 74. இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவர் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
இவர் 2016ம் ஆண்டு திமுக சார்பில் சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில், பொன்னுசாமி சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தலைவர்கள் இரங்கல்
சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்எல்ஏ பொன்னுசாமி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்
சேந்தமங்கலம் தொகுதியின் எம்எல்ஏ பொன்னுசாமி மறைந்த துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். அவரது பிரிவால் வாடும் சேந்தமங்கலம் தொகுதி மக்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.
தமிழக பாஜ தலைவர், நயினார் நாகேந்திரன்
சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏ பொன்னுசாமியின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரை பிரிந்து வாடும், அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், திமுகவினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
கவர்னர் ஆர்.என்.ரவி
சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி எம்எல்ஏ பொன்னுசாமியின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. பொது சேவை மற்றும் சமூக நலனுக்கான அவரது பங்களிப்புக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கு எனது நெஞ்சார்த்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!.







மேலும்
-
ஆட்சி முடியும் நேரத்தில் நாடகமாடுவதால் யாருக்கு என்ன பலன்? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி
-
இன்று 14 மாவட்டங்கள், நாளை 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
-
தமிழ் சினிமாவில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு மரணங்கள்!
-
சூடுபிடித்தது பீஹார் தேர்தல் களம்: இண்டி கூட்டணி முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி தேர்வு
-
நெற்பயிர் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம்: தமிழக அரசுக்கு நயினார், சீமான் வலியுறுத்தல்
-
மலேசியாவில் ஆசியான் உச்சிமாநாடு; காணொலி காட்சியில் பங்கேற்கிறார் மோடி