இன்று 14 மாவட்டங்கள், நாளை 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

1


சென்னை: தமிழகத்தில் இன்று (அக் 23) 14 மாவட்டங்களிலும், நாளை (அக் 24) 6 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: வங்கக்கடலில் நாளை (அக் 23) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. வளிமண்டல காற்று சுழற்சியால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.


தென்கிழக்கு வங்க கடலில் வளிமண்டல காற்று சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (அக்., 23) கனமழை (மஞ்சள் அலெர்ட்) வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* கன்னியாகுமரி,
* திருநெல்வேலி,
* தென்காசி,
* தேனி,
* திண்டுக்கல்,
*கோவை,
* நீலகிரி,
* ஈரோடு,
* தர்மபுரி,
* கிருஷ்ணகிரி,
* திருப்பத்தூர்,
* வேலூர்,
* ராணிப்பேட்டை,
* திருவள்ளூர்

நாளை (அக்., 24) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* நீலகிரி
* ஈரோடு
* கோவை
*திருப்பத்தூர்
* வேலூர்
* ராணிப்பேட்டை

அக்டோபர் 26ம் தேதி கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* விழுப்புரம்,
* செங்கல்பட்டு,
* காஞ்சிபுரம்,
* ராணிப்பேட்டை,
* சென்னை,
* திருவள்ளூர்.

அக்டோபர் 27ம் தேதி கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* செங்கல்பட்டு,
* காஞ்சிபுரம்,
* ராணிப்பேட்டை,
* சென்னை,
* திருவள்ளூர்.


அக்டோபர் 28ம் தேதி கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* திருவள்ளூர்,
* சென்னை,
* ராணிப்பேட்டை,
* காஞ்சிபுரம்,
* செங்கல்பட்டு
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement