தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை; சவரனுக்கு ரூ.320 குறைவு

சென்னை: சென்னையில் இன்று (அக் 23) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால் நம் நாட்டில் தங்கம் விலை உச்சத்தை எட்டிஉள்ளது. இந்நிலையில், சில தினங்களாக தங்கம் விலையில் ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (அக் 21) ஆபரண தங்கம் கிராம் 12,000 ரூபாய்க்கும், சவரன் 96,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம் 182 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று (அக் 22) காலை, தங்கம் விலை கிராமுக்கு 300 ரூபாய் குறைந்து, 11,700 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 2,400 ரூபாய் சரிவடைந்து, 93,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து, 180 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று மாலை மீண்டும் தங்கம் கிராமுக்கு 160 ரூபாய் குறைந்து, 11,540 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 1,280 ரூபாய் சரிவடைந்து, 92,320 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 175 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று ஒரே நாளில் மட்டும், தங்கம் விலை கிராமுக்கு 460 ரூபாய், சவரனுக்கு 3,680 ரூபாய் சரிவடைந்தது. இந்நிலையில் இன்று (அக் 23) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.11,500க்கு விற்பனை ஆகிறது.
கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4 ஆயிரம் சரிந்து நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.174க்கு விற்பனை செய்யப்படுகிறது.


மேலும்
-
ஆட்சி முடியும் நேரத்தில் நாடகமாடுவதால் யாருக்கு என்ன பலன்? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி
-
இன்று 14 மாவட்டங்கள், நாளை 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
-
தமிழ் சினிமாவில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு மரணங்கள்!
-
சூடுபிடித்தது பீஹார் தேர்தல் களம்: இண்டி கூட்டணி முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி தேர்வு
-
நெற்பயிர் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம்: தமிழக அரசுக்கு நயினார், சீமான் வலியுறுத்தல்
-
மலேசியாவில் ஆசியான் உச்சிமாநாடு; காணொலி காட்சியில் பங்கேற்கிறார் மோடி