நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் துவக்கம்: 27-ல் அறிவிக்கிறது தேர்தல் கமிஷன்

புதுடில்லி: நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை(எஸ்ஐஆர்) துவக்குவதற்கான அறிவிப்பை வ ரும் 27-ம் தேதியன்று தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொள்ள தேர்தல் கமிஷன் ஆர்வம் காட்டி வருகிறது. இது தொடர்பாக கடந்த செப்.,09-ம் தேியன்று ஆலோசனை நடத்தியது. அப்போது நாடு முழுதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை அக்டோபரில் துவக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது. அதில், வாக்காளர்களின் எண்ணிக்கை, கடந்த முறை நடந்த திருத்தப் பணிகளின் தகவல்கள் உள்ளிட்டவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று ( அக்.23) வெளியான தகவலில் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை துவக்குவதற்கான அறிவிப்பை வரும் 27-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது. அப்போது பல்வேறு கட்டங்களாக இப்பணியை மேற்கொள்வது எனவும் முதற்கட்ட பணிகள் வரும் நவம்பர் 01-ம் தேதி முதல் துவங்க தேர்தல் கமிஷன் முடிவு எடுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும்
-
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு
-
கத்திமுனையில் மாணவர்களை தாக்கி பணம் பறித்தோருக்கு வலை
-
நாகன் தாங்கல் ஏரியை துார் வாரி சீரமைத்த டாடா கம்யூனிகேஷன்ஸ்
-
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சுத்தமான சுற்றுலா தலம் விருது
-
வருமான வரி செலுத்தும் குடும்பத்தினரை தவிர்த்து மற்றவர்களுக்கு உரிமைத்தொகை நிதித்துறை ஒப்புதல்
-
மருத்துவ சான்றிதழ் படிப்பு நவ., 14 வரை அவகாசம்