கத்திமுனையில் மாணவர்களை தாக்கி பணம் பறித்தோருக்கு வலை
பூந்தமல்லி: கத்திமுனையில், மாணவர்களை தாக்கி பணம் பறித்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பூந்தமல்லி, கரையான்சாவடியில் தங்கி கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் இருவர், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு, தங்களது அறைக்கு நடந்து சென்றனர்.
அப்போது, பைக்கில் வந்து வழிமறித்த மர்ம நபர்கள் இருவர், கத்தியை காட்டி மிரட்டி, மாணவர்களிடம் 300 ரூபாயை, மொபைல் போன் பணப்பரிமாற்ற செயலியான 'ஜிபே' மூலம் பறித்தனர்.
மேலும், மாணவர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கி, காலில் விழ வைத்து சித்ரவதை செய்து தப்பினர்.
இது குறித்து மாணவர்கள் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார், வழிப்பறி திருடர்கள் இருவரை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி; விதி மீறி வழங்கியதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு
-
அக். 30ல் தென் கொரியா உச்சி மாநாட்டில் சீன அதிபரை சந்திக்கிறார் டிரம்ப்
-
ரஷ்யா தாக்கப்பட்டால் கடும் பதிலடி: அமெரிக்காவின் அழுத்தம் பலனளிக்காது என்கிறார் அதிபர் புடின்
-
அக். 29ல் டில்லியில் செயற்கை மழை சோதனை துவக்கம்
-
ஆந்திராவில் துயர சம்பவம்: பஸ்சில் தீ பற்றியதில் பயணிகள் 25 பேர் பரிதாப பலி
-
மின்கம்பத்தை இழுத்த யானை மின்சாரம் பாய்ந்து பலி
Advertisement
Advertisement