நாகன் தாங்கல் ஏரியை துார் வாரி சீரமைத்த டாடா கம்யூனிகேஷன்ஸ்
சென்னை: திருவள்ளூர் மாவட்டம், பொத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட உப்பரபாளையத்தில், நாகன் தாங்கல் ஏரி உள்ளது. இதை, டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், துார் வாரி சீரமைத்துள்ளது.
நாகன் தாங்கல் ஏரி, 15 ஏக்கர் பரப்பளவு உடையது. இது, 2,800 கிராம மக்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக திகழ்ந்தது. பல ஆண்டுகளாக துார் வாரப்படாமல் இருந்ததால், வண்டல் மண் படிந்து, மாசுபட்டது. இதனால் அதன் கொள்ளளவு, 75 சதவீதம் குறைந்தது.
அந்த ஏரியை, டாடா கம்யூனிகேஷன்ஸ், 'புராஜக்ட் நன்னீர்' எனும் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் சீரமைத்துள்ளது. ஏரியின் நான்கு மீட்டர் பரப்பளவுக்கு, 1.50 மீட்டர் ஆழம் வரை துார் வாரப்பட்டு, வண்டல் நீக்கப்பட்டது.
சீரமைப்புக்கு முன், 26 லட்சம் லிட்டராக இருந்த நீர் சேமிப்பு தற்போது, 85 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது. நீர் பரவியிருக்கும் பரப்பளவும் அதிகரித்து உள்ளது.
இதன் மூலம், பல ஆண்டுகளாக பயனற்ற நிலையில் இருந்த நாகன் தாங்கல் ஏரி, பல்லுயிர்களுக்கான செழிப்பான சுற்றுச்சூழலையும், மக்களுக்கு நீர்வள ஆதாரமாகவும் புத்துயிர் பெற்றுள்ளது.
மேலும்
-
சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி; விதி மீறி வழங்கியதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு
-
அக். 30ல் தென் கொரியா உச்சி மாநாட்டில் சீன அதிபரை சந்திக்கிறார் டிரம்ப்
-
ரஷ்யா தாக்கப்பட்டால் கடும் பதிலடி: அமெரிக்காவின் அழுத்தம் பலனளிக்காது என்கிறார் அதிபர் புடின்
-
அக். 29ல் டில்லியில் செயற்கை மழை சோதனை துவக்கம்
-
ஆந்திராவில் துயர சம்பவம்: பஸ்சில் தீ பற்றியதில் பயணிகள் 25 பேர் பரிதாப பலி
-
மின்கம்பத்தை இழுத்த யானை மின்சாரம் பாய்ந்து பலி