ஆந்திராவில் துயர சம்பவம்: பஸ்சில் தீ பற்றியதில் பயணிகள் 25 பேர் பரிதாப பலி
அமராவதி: ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் பஸ் தீப்பற்றிய சம்பவத்தில் பயணிகள் 25 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவர்களது உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகின்றன. மேலும் 15க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த இந்த பஸ் ஆந்திர மாநிலம் கர்னூலில் பைக் மீது நேருக்கு நேர் மோதி தீப்பற்றியது என விசாரணையில் தெரியவந்தது. இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்ன தேகூர் கிராமத்திற்கு அருகே நடந்த பேரழிவு தரும் பஸ் தீ விபத்து குறித்து அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன்.
@quote@தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். quote
காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் வழங்குவார்கள். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
@block_G@
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள பதிவில், ''ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் பஸ்சில் தீப்பற்றியதில் உயிர் இழப்புகள் மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்'' என குறிப்பிட்டு உள்ளார்.block_G
@block_B@
பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துகொள்கிறேன்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும்'' என குறிப்பிட்டுள்ளார். block_B
மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அவர்கள் அனைவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மிகவும் துக்ககரமான சம்பவம், ஆழ்த்த இரங்கல்
விவேகம் இல்லாத வேகம் உயிரை குடிக்கிறது. பைக், ஆட்டோகாரன் ஆம்னி பஸ் வேகம், போகும் போக்கு உயிரை கலங்க அடிக்கிறது. A/C பஸ்களில் இன்னும் ஆபத்து அதிகம்.
இருசக்ர வாகன ஓட்டிகள், ஆட்டோ, அதிவேகத்தில் பயணிக்கும் ஆம்னி பஸ்கள், தண்ணீர் மற்றும் சரக்கு வாகன ஓட்டிகள், சின்னஞ் சிறார்களிடம் ஆதிவேக இருசக்ர வாகனங்களை வழங்கும் பெற்றோர் என அனைவருக்குமே விழிப்புணர்வு தேவை. ஒரு பைக் ஓட்டுனரின் தவறால் அநியாயமாக 20 உயிர்களுக்கு மேல் பலி . பலியானவர் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
சுலபத்தில் தீ பிடிக்காத உலோகம் ஒன்றில் வாகனங்கள் தயாரிக்கப்படவேண்டும். உயிர்கள் காக்கப்படவேண்டும். அதிக தூரம் பயணிக்கும் பேருந்துகளில் பயணிகள் விபத்திலிருந்து தப்பிக்க குறைந்தது நான்கு கதவுகள் பொருத்தப்பட்ட பேருந்துகள் தயாரிக்கப்படவேண்டும். விபத்தில் மரணம் அடைந்த பயணிகளின் ஆன்மா சாந்தி அடையட்டும்.
Impact தான் காரணம் ..எந்த உலோகமும் நெருப்பில் எரியாது
ரோடையெல்லாம் ராத்திரி 10 மணிக்கு மேலே காலை 5 மணிவரைக்கும் மூடிறலாம். இல்லே கதிசக்தி போட்டுத் தள்ளிக்கிட்டே இருக்கும்.மேலும்
-
இந்தியா வழியில் ஆப்கானிஸ்தான்: பாகிஸ்தான் நோக்கி பாயும் நதிகளில் அணை கட்ட ஏற்பாடு
-
தேஜ கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் மாநில வளர்ச்சி வேகம் அடையும்: பீஹார் பிரசாரத்தில் மோடி உறுதி
-
பீஹாரில் கர்ப்பூரி தாக்கூர் குடும்பத்தினருடன் உரையாடிய மோடி!
-
பூண்டி ஏரியிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
-
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான ஊழல் குற்றச்சாட்டு; நவம்பர் 13ல் நீதிமன்றம் தீர்ப்பு
-
அடையாறு முகத்துவாரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு: அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு