அக். 29ல் டில்லியில் செயற்கை மழை சோதனை துவக்கம்
புதுடில்லி: அக்.29ம் தேதி முதல் டில்லியில் செயற்கை மழைப்பொழிவுக்கு மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.
தலைநகர் டில்லியில் ஆண்டுதோறும் குளிர்காலத்தில் காற்று மாசு கடுமையாக அதிகரிக்கும். அண்டை மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிப்பது, வாகனப் புகை என பல்வேறு காரணங்களால் டில்லியில் காற்று மாசு அதிகரிக்கிறது. இதை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடந்த அக்.7ம் தேதியன்று டில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா நிருபர்களிடம் கூறுகையில், ''வடமேற்கு டில்லியின் ஐந்து இடங்களில் செயற்கை மழை சோதனை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், டில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்ததால் சோதனை ஒத்தி வைக்கப்பட்டது'' என்றார்.
இந்நிலையில் நேற்று டில்லி முதல்வர் ரேகா குப்தா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''வானிலை நிலைமைகள் சாதகமாக, குறிப்பாகப் போதுமான மேக அடர்த்தி மற்றும் ஈரப்பதம் இருந்தால், வரும் அக் 29 மற்றும் 30ம் தேதியன்று மேக விதைப்பு விமானம் மூலம் வடமேற்கு டில்லியில் ஐந்து இடங்களில் முதன்முறையாக செயற்கை மழை சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
..நகர் வளர்ச்சி. மறுவடிவம்...மாசு
ஏன் வெள்ளத்திலே மிதக்கிறது பத்தல்லையா?மேலும்
-
இந்தியா வழியில் ஆப்கானிஸ்தான்: பாகிஸ்தான் நோக்கி பாயும் நதிகளில் அணை கட்ட ஏற்பாடு
-
தேஜ கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் மாநில வளர்ச்சி வேகம் அடையும்: பீஹார் பிரசாரத்தில் மோடி உறுதி
-
பீஹாரில் கர்ப்பூரி தாக்கூர் குடும்பத்தினருடன் உரையாடிய மோடி!
-
பூண்டி ஏரியிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
-
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான ஊழல் குற்றச்சாட்டு; நவம்பர் 13ல் நீதிமன்றம் தீர்ப்பு
-
அடையாறு முகத்துவாரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு: அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு