ரஷ்யா தாக்கப்பட்டால் கடும் பதிலடி: அமெரிக்காவின் அழுத்தம் பலனளிக்காது என்கிறார் அதிபர் புடின்
மாஸ்கோ: ''ரஷ்யா மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்காவின் அழுத்தம் பலனளிக்காது'' என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்து உள்ளார்.
போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா சம்மதிக்காததால், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அந்நாட்டின் இரு பெரிய கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடையை அமல்படுத்தினார். உலக கச்சா எண்ணெய் விநியோகத்தில் இந்த இரு நிறுவனங்களும், 6 சதவீத பங்கை கொண்டு உள்ளன.
ரஷ்ய அரசுக்கான மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக இந்நிறுவனங்கள் உள்ளன. இது குறித்து அதிபர் புடின் கூறியதாவது: அமெரிக்காவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலிருந்தோ வரும் அழுத்தங்களுக்கு ரஷ்யா ஒருபோதும் அடிபணியாது. ரஷ்யா மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
ரஷ்யா மீதான தடைகள் நட்பற்ற செயல். இது சில விளைவுகளை ஏற்படுத்தும். அவை நமது பொருளாதார நல்வாழ்வை கணிசமாக பாதிக்காது. ரஷ்யாவின் எரிசக்தி துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது நிச்சயமாக ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்கும் முயற்சி தான். சுயமரியாதை கொண்ட எந்த நாடும் அப்படி செய்யாது. இவ்வாறு அதிபர் புடின் கூறினார்.
@block_Y@
அமெரிக்க தடைகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என ரஷ்ய அதிபர் புடின் கருத்து பற்றி நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு டிரம்ப் அளித்த பதில்: அவர் அப்படி உணருவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இப்போதிலிருந்து 6 மாதங்களில் அதை பற்றி நான் உங்களுக்கு தெரிவிப்பேன். எல்லாம் எப்படி சரியாகும் என்று பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.block_Y
ரஷ்யா நமக்கு தேவையான ராணுவ ஆயுதங்களை கொடுத்து ஆதரிப்பதால், நமக்கு நண்பன் ரஷ்யா தான். பாகிஸ்தானின் மஜா வேலைகளுக்கு புடின் ஆதரவு தருவதில்லை.
இந்தியா பிரதமர் மோடிஜி எனது இனிய நண்பர் என்று சொல்லி சொல்லியே இந்தியாவிற்கு எதிராக எதையாவது செய்து வரும் கோமாளி டிரம்ப். இன்னும் என்ன என்ன வித்தைகள் காணப்போகிறோம் என்று தெரியவில்லை
புடின் சர்வாதிகாரி. சர்வாதிகாரியை விட வலிமையானவன் மேலானவன். நாம் ஆயிரம் பேசலாம், சொல்லலாம். அதில் உண்மையுள்ளதா என்பதை யோசிக்க வேண்டும். இவன் ஊரில் இவரை எதிர்ப்போரின் கதி என்ன வாகும் என்பது இன்றும் உலகமறிந்ததே இப்போது இவர் சீன அதிபர் போன்று இவர், தான் உயிருள்ளவரை நிரந்தரத் தலைவர். உக்ரேன் மீது தேவையில்லாமல் படையெடுத்து அந்த ஊரின் ஒருப் பகுதியை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துக் கொண்டவர் இவர். இப்போது தேவையில்லாமல் புலம்பிக் கொண்டிருப்பதில் என்னப் பயன்? கடும்பதிலடியென்றால் என்ன அர்த்தம், அணுகுண்டுப் போடுவேன் என்று மிரட்டப் போகின்றாரா? அன்று ஐரோப்பிய ஒன்றியத்தை இவர் மிரட்டிய போது அன்று பிரான்ஸ் அதிபரே இவரைப் பார்த்து எச்சரிக்கையாக சொன்னது "பிரான்சிடமும் அணுகுண்டு உள்ளது" என்றதுதான்.
ரஷ்யா தான் அமெரிக்காவுக்கு விற்கும் யுரேனியம் போன்ற பொருட்களுக்கு அதிக வரி விதித்தால் டிரம்ப்பால் ஒன்றும் செய்ய முடியாது. என்ன முயன்றாலும் ரஷ்யாவின் மண்ணாசையை ஒழிக்க முடியாது
அப்பாடா ஒருவழியாய் எதிர்ப்பு வந்துருச்சு...
வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு.
வரி பைத்தியம் பிடித்து அலையும் டிரம்புக்கு அமெரிக்க மக்கள் தான் புத்தி புகட்ட வேண்டும். உலக அமைதியை கெடுத்து கொண்டு உள்ளார்.
ரஷ்யாவும், அமெரிக்காவும் மூன்றாம் உலகப்போருக்கு தயாராகிவிட்டார்கள். முதல் இரண்டு உலகப்போர்களை பார்க்காமல் போய்விட்டோமே என்று ஏங்கும் இன்றைய இளையதலைமுறைக்கு ஒரு வாய்ப்பு உலகப்போரை நேரில் காண. ஒருவேளை மூன்றாம் உலகப்போர் மூண்டால், மொத்த உலகமும் அழியும். அப்படிப்பட்ட போரை காணவேண்டுமா இளையதலைமுறையினரே...?
ஏதாவது கற்பனை கதைகளை எழுதி பொழுது போக்குறது உங்க வேலை ..எந்த ஆராய்ச்சியும் கிடையாது .
புடின் விவரம் தெரியாதஆளா இருக்காரு. இதுவே கட்டுமரம் ரஷ்ய அதிபரா இருந்திருந்தால் திருட்டு திமுகவினர் ஒரு ஆயிரம் பேரை டிக்கெட் இல்லாமல் அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்திருப்பார். அவர்கள் வெறும் பத்தே வருடங்களில் ஊழல்கள் மற்றும் லஞ்சங்கள் மூலம் மொத்த அமெரிக்காவையும் ஆட்டையை போட்டு ரஸ்யாவுடன் சேர்த்திருப்பார்கள். கத்தியின்றி ரத்தமின்றி அசால்ட்டாக இந்த பிரச்னையை கையாண்டிருப்பார் கட்டுமரம்.
உங்க அறிவும் திறமையும் கருணாநிதி போலவே இருக்கிறது ??இதை கண்டு வியக்கேன்??
அமெரிக்கா எப்போதும் நமக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வந்து இருக்கிறது. நாம் எப்போதும் ரஷ்யா ஆதரவு நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டும்...... அவர்கள் தான் எப்போதும் நமது நட்பு நாடு.மேலும்
-
இந்தியா வழியில் ஆப்கானிஸ்தான்: பாகிஸ்தான் நோக்கி பாயும் நதிகளில் அணை கட்ட ஏற்பாடு
-
தேஜ கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் மாநில வளர்ச்சி வேகம் அடையும்: பீஹார் பிரசாரத்தில் மோடி உறுதி
-
பீஹாரில் கர்ப்பூரி தாக்கூர் குடும்பத்தினருடன் உரையாடிய மோடி!
-
பூண்டி ஏரியிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
-
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான ஊழல் குற்றச்சாட்டு; நவம்பர் 13ல் நீதிமன்றம் தீர்ப்பு
-
அடையாறு முகத்துவாரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு: அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு