சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி; விதி மீறி வழங்கியதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு
சென்னை: மத்திய அரசின் அங்கீகாரமான 'ராம் சார்' அறிவிக்கையில் இடம் பெற்றுள்ள பெரும்பாக்கம், பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் கட்டடம் கட்ட, 'பிரிகேட்' என்ற தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. விதிகளை மீறி சுற்றுச்சூழல் மற்றும் கட்டட அனுமதி வழங்கியுள்ளதாக, அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கூறியதாவது: நீர்நிலைகள், சதுப்பு நிலங்களை பாதுகாப்பதற்காக, 'ராம்சார்' ஒப்பந்தப்படி, சர்வதேச அளவிலான அங்கீகாரம் வழங்கப்படுகிறது. அதன்படி, சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின், 3,080 ஏக்கர் நிலபரப்பு ராம்சார் தளமாக, 2022 ஏப்., 8ல் அறிவிக்கப்பட்டது. இவ்வாறு, ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள், கட்டடங்கள் உள்ளிட்ட எவ்வித நிரந்தர அமைப்புகளை ஏற்படுத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியை, சூழலியல் ரீதியாக பாதுகாக்க வேண்டியது கட்டாயமாகிறது. புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்நிலையில், இங்கு, 15 ஏக்கர் நிலத்தில், 2,000 கோடி ரூபாய் மதிப்பில், 1,250 வீடுகள் அடங்கிய 'பிரிகேட் மார்கன் ஹைட்ஸ்' என்ற அடுக்குமாடி குடியிருப்பு கட்ட, 'பிரிகேட்' நிறுவனம், 2022 ஜூலையில் சுற்றுச்சூழல் அனுமதி கோரியது.
இந்த விண்ணப்பம், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் வல்லுநர் குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதில், நிலத்தின் அமைவிடம் குறித்து பிரிகேட் நிறுவனம் தவறான தகவல்களை அளித்துள்ளது. இதன் பின், 2024, ஜனவரியில், தமிழக அரசு நடத்திய உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்று, இத்திட்டம் தொடர்பாக அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது.
'உலக முதலீட்டாளர் மாநாட்டு ஒப்பந்த திட்டம்' என்ற அடைமொழியுடன் இத்திட்டம் தொடர்பான கோப்புகளுக்கு வனத்துறை, வருவாய் துறை அதிகாரிகள், விதிகளை மீறி ஒப்புதல் அளித்துள்ளனர். இதன் அடிப்படையிலான ஆய்வின்போது வனத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் உண்மை நிலைக்கு மாறாக, தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
தவறான கருத்துகள் குறிப்பாக, ராம்சார் தள வரைபடத்தின் அடிப்படையில் பார்க்காமல், பள்ளிக்கரணை சதுப்பு நில எல்லை என்ற பெயரில் அதிகாரிகள் இந்நிறுவனத்துக்கு சாதகமாக, தவறான கருத்துகளை கோப்புகளில் பதிவிட்டுள்ளனர். இதன் அடிப்படையில், இந்த ஆண்டு ஜன., 20ல், பிரிகேட் நிறுவன திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மூன்று நாட்களில் அதாவது, ஜன., 23ல் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., இத்திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை, ராம்சார் அங்கீகாரத்துடன் மேம்படுத்துகிறோம் என, முதல்வர் அறிவித்து வருகிறார். அவர் முன்னிலையிலேயே சதுப்பு நிலத்தை அழித்து கட்டடம் கட்டும் திட்டத்துக்கு, அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்கிறது.
இதில் நடந்துள்ள முறைகேடுகளை விசாரித்து, சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய நிலவரப்படி, 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இத்திட்டத்தில், 100 கோடி ரூபாய்க்கு மேல் அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து முதல்வர், தலைமை செயலர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் உள்ளிட்டோருக்கு புகார் அனுப்பி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
வெட்டுறதை வெட்டுனா வங்க கடலில் மட்டுமல்ல சென்ட்ரல் ஸ்டேஷன்ல கூட அடுக்குமாடி குடியிருப்பு கட்டகூட அனுமதி கொடுப்போம்
ஏரிகள் எல்லாம் பிளாட்கள் ஆக மாற்றும் போது, மக்கள் பஸ் வசதிக்கு பதில், படகு வசதி கேட்பது தானே முறை.
அப்படியே, கொஞ்சம் சைதாப்பேட்டை ஆறு ஓரம் ஒரு பெரிய கட்டடம், குன்றத்தூர் அடையாறு ஆறு ஓரமா ஒரு பெரிய கட்டிடம். இதெல்லாம் எந்த கணக்குல வரும் ஆபிஸர் ?? சைதாப்பேட்டை சின்னமலை வடிகால் கால்வாய் மேல, ஒரு பிரபல ஓட்டல் இருக்கே. அது என்ன கணக்கு ?
2000 கோடிக்கு 40 சதவிகிதம் என்றால் 800 கோடி வருகிறது. அதிகாரிகளுக்கு 100 கோடி வெட்டியாச்சு. மீதி 700 கோடி எங்க போயிருக்கும்னு தெரிஞ்சால் கணக்கை சீர்படுத்திவிடலாம்.
எங்க கொள்கையே டெவெலப்மென்ட் டெவெலப்மென்ட் டெவெலப்மென்ட் மட்டுமே இந்த விஷயங்களில் உயிரைக்கொடுத்தேனும் கொள்கையை காப்பாற்றுவோம்
கட்டிடம் கட்டிய 10 வருடங்களில் பூமிக்குள் புதையும். 1250 பிளாட் x 5 = 6250 பேரின் உயிருக்கு ஆபத்து உள்ளது. ஏற்கனவே சுனாமி பாதிக்கப்படும் அபாயம் உள்ள பகுதி அது.
எல்லாம் ஒரு டெவலப்மெண்ட்... தான்
கட்டி முடிக்கப்பட்ட பின்பு கோர்ட் இடிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அப்போது தான் அராஜக கட்டுமான நிறுவனத்துக்கு அறிவு வரும்? வேளச்சேரி பெரும்பாக்கம் பள்ளிக்கரணை பகுதிகளில் 50 சதவீதம் நீர்நிலைகள், சதுப்பு நில ஆக்கிரமிப்புதான்.
வேளச்சேரி ஏரியின் கரைகளில் கொஞ்சம் கொஞ்சமாக கட்டட கழிவுகளை கொட்டி பார்க்கிங் மற்றும் குப்பை மூட்டைகளை அடுக்கி ஆக்கிரமிப்பு தொடர்கிறது ..டாஸ்மாக் பார் நீர்வரும் பாதையில் கட்டப்பட்டுள்ளது ..கழிவுநீர் தொட்டிகளில் சேமிக்கப்பட்டு நள்ளிரவில் சாலைகளில் பும்பிங் செய்யப்பட்டு நோய் பரவ வழி செய்கிறார்கள் ..பக்கத்தில் போலீஸ் பீட் இருப்பது இன்னமும் கொடுமை ..பாருக்கு செல்லும் குடிமகன்களின் இருசக்கர வாகனங்களுக்கு பார்க்கிங் சேவகர்களாகவும் வாட்ச்மேனாகவும் இருக்கிறார்கள்மேலும்
-
இந்தியா வழியில் ஆப்கானிஸ்தான்: பாகிஸ்தான் நோக்கி பாயும் நதிகளில் அணை கட்ட ஏற்பாடு
-
தேஜ கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் மாநில வளர்ச்சி வேகம் அடையும்: பீஹார் பிரசாரத்தில் மோடி உறுதி
-
பீஹாரில் கர்ப்பூரி தாக்கூர் குடும்பத்தினருடன் உரையாடிய மோடி!
-
பூண்டி ஏரியிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
-
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான ஊழல் குற்றச்சாட்டு; நவம்பர் 13ல் நீதிமன்றம் தீர்ப்பு
-
அடையாறு முகத்துவாரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு: அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு