இன்று 12 மாவட்டங்கள், நாளை 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; சென்னை வானிலை மையம்

3


சென்னை: தமிழகத்தில் இன்று (அக் 25) 12 மாவட்டங்களிலும், நாளை (அக் 26) 6 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மறுநாள் புயலாக மாறும். இந்த புயலுக்கு 'மோந்தா' என பெயரிடப்பட்டு இருக்கிறது. அக்டோபர் 28ம் தேதி மாலை அல்லது இரவில் ஆந்திராவின் மசூலிப்பட்டினம்- கலிங்கபட்டினம் இடையே காக்கிநாடா பகுதியில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.

இன்று (அக் 25) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:


* நீலகிரி

* கோவை

* திண்டுக்கல்

* தேனி

* தென்காசி

* திருநெல்வேலி

* கன்னியாகுமரி

* கடலூர்

* விழுப்புரம்

* செங்கல்பட்டு

* சென்னை

* திருவள்ளூர்

நாளை (அக் 26) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* திருவள்ளூர்

* சென்னை

* ராணிப்பேட்டை

* காஞ்சிபுரம்

* செங்கல்பட்டு

* விழுப்புரம்

அக் 27ம் தேதி மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* திருவள்ளூர்

* சென்னை

* ராணிப்பேட்டை

கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* வேலூர்

* காஞ்சிபுரம்

* செங்கல்பட்டு

* விழுப்புரம்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement