பாமக செயல்தலைவர் பதவியை மகளுக்கு வழங்கினார் ராமதாஸ்
தர்மபுரி: பாமக செயல் தலைவர் பதவியை தனது மூத்த மகள் ஸ்ரீகாந்திக்கு வழங்குவதாக, நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
@1brதர்மபுரியில் நடந்த பா.ம.க., பொதுக்குழு கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: பெருமைக்குரிய இந்த மண்ணில் ஒரு புதிய அறிவிப்பை வெளியிடுகிறேன். செயல் தலைவர் என்ற பொறுப்பை உருவாக்கினேன். அதற்கு தனக்கு தகுதியில்லை என்று அதனை ஒருவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
செயல் தலைவர் பொறுப்பை பெரிய மகள் ஸ்ரீ காந்திக்கு வழங்குகிறேன். அவர் கட்சியையும் வளர்ப்பார். எனக்கும் பாதுகாப்பாக இருப்பார். அவருக்கு நாம் அனைவரும் வாழ்த்து சொல்வோம்.
பாமக என்பது நான் போட்ட விதை, அன்புமணிக்கும் கட்சிக்கும் என்ன சம்மந்தம் உள்ளது. தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி கூட்டணியை நான் அமைப்பேன். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
@block_P@
வந்தார் ஸ்ரீ காந்தி; அதிர்ந்தார் அன்புமணி!
குடும்ப பிரச்னையை சமாளிக்க, தன் மகளை அரசியலுக்கு கொண்டு வந்ததுடன், மருமகள் சவுமியாவின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மகளை வரும் சட்டசபை தேர்தலில் களமிறக்கவும், ராமதாஸ் முடிவு எடுத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின. அண்மையில் மகன் அன்புமணிக்கு கட்சி தலைவர் பதவியை பறித்து செயல் தலைவர் பொறுப்பை ராமதாஸ் வழங்கினார்.
தற்போது அந்த செயல் தலைவர் பொறுப்பையும் மகனிடம் பறிந்து மூத்த மகள் ஸ்ரீ காந்திக்கு வழங்கி ராமதாஸ் அதிரடி காட்டி இருக்கிறார். கட்சியில் தனக்கு எதிராக மல்லுகட்டும் மகன் அன்புமணியை, அவருடைய சகோதரியை வைத்தே செக் வைக்கும் திட்டம் தான் இது என, ராமதாசின் செயல்திட்டம் அறிந்த கட்சியினர் கூறுகின்றனர்.block_P
வாசகர் கருத்து (41)
Tetra - New jersy,இந்தியா
25 அக்,2025 - 21:16 Report Abuse
அய்யா இட ஒதிக்கீடு மருத்துவர் தன் பேரனுக்கு மற்ற பதவிகளை தருவார். தைலாபுரம் அரசல்லவா. கோபாலபுரம் பேரரசு இருக்கும் போது குறுநில தைலாபுர மன்னர் தன் வாரிசை நியமிக்கக் கூடாதா. முட்டாள்கள் கூட்டம் இருக்கும் வரைக்கும் பேரரசும் குறுநில மன்னர்களும் இருக்கத்தான் செய்வார்கள். எவனாவது ஒருவன் நல்லது செய்தாலும் அதை வடக்கன் என்று சொல்லி புறம் தள்ளுவார்கள் 0
0
Reply
HoneyBee - Chittoir,இந்தியா
25 அக்,2025 - 21:12 Report Abuse
சீக்கிரம் அழிந்து போங்க... எதுக்கு வீண் வம்பு.. 0
0
Reply
Raghavan - chennai,இந்தியா
25 அக்,2025 - 20:55 Report Abuse
0
0
Reply
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
25 அக்,2025 - 20:46 Report Abuse
கட்சி கணக்கில் உள்ள பணம் தான் இப்புடி எல்லாவரையும் பாடாய் படுத்துகிறது. தொண்டர்களுக்கு வெல்லம் வழங்கும் விழா எப்போதுன்னு ஸ்ரீ காந்தி வந்து அனௌன்ஸ் பண்ணுவாங்க. 0
0
Reply
visu - tamilnadu,இந்தியா
25 அக்,2025 - 20:19 Report Abuse
என் குடும்பத்தில் யாரவது பதவிக்கு வந்தால் என்னை சவுக்கால் அடியுங்கள் என்றார்.பின்னர் அதை மறந்து அன்புமணியை அமைச்சர் ஆக்கினார் கட்சியை காலி செய்யாமல் சாகமாட்டார் போலும் 0
0
Reply
G Mahalingam - Delhi,இந்தியா
25 அக்,2025 - 20:17 Report Abuse
கட்சி அழிந்து கொண்டு வருவதால் பெட்டி மட்டுமே போதும் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள். இது அப்பா மகன் நாடகம். இப்போது இரண்டு கட்சிகளிடம் பெட்டி கிடைக்கும். 0
0
Reply
Santhakumar Srinivasalu - ,
25 அக்,2025 - 20:12 Report Abuse
கட்சியை ஒழிக்க தவறு மேல் தவறு ? 0
0
Reply
Senthil Arun Kumar D - Coimbatore,இந்தியா
25 அக்,2025 - 19:33 Report Abuse
ஒரு தவறை சரி செய்ய மீண்டும் ஒரு தவறு. கட்சியில் வேறு யாரும் இதற்க்கு தகுதி ஆனவர்கள் இல்லையா? 0
0
Reply
Vijayasekar - ,இந்தியா
25 அக்,2025 - 18:58 Report Abuse
இந்த வன்னிய சமுதாய மக்களுக்கு வெக்கமே கிடையாது . பா ம க பட்டா போட்ட சொத்து மாதிரி நடந்துக்கிறானுக . 0
0
Reply
Venkateswaran Rajaram - Dindigul,இந்தியா
25 அக்,2025 - 18:41 Report Abuse
பேத்திக்கு கொ ப செயலாளர் கொடு ,மாமியாருக்கு பொருளாளர் பதவி கொடு ,தொண்டன் எப்பவும் தொண்டன்தான் ...இப்படியே உங்க குடும்பம் நல்லா ஊரை ஏமாத்தி பொழப்பு நடத்துங்க 0
0
Reply
மேலும் 31 கருத்துக்கள்...
மேலும்
-
போலீஸ் செய்திகள் தகராறில் 4 பேர் காயம்
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 67 போலீசார் பணியிட மாற்றம்
-
ஆண்டிபட்டியில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு இன்றி அன்றாடம் தவிப்பு; 25 ஆண்டுகளாக வலியுறுத்தியும் கிடைக்காத பைபாஸ் ரோடு திட்டம்
-
மொபைல்போன் சர்வீஸ் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
-
படகு கவிழ்ந்து இறந்த மீனவர் உடல் கரை ஒதுங்கியது
-
பேட்டி
Advertisement
Advertisement