இந்தியா அசத்தல் வெற்றி * சதம் விளாசினார் ரோகித்

சிட்னி: மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சதம், கோலி அரைசதம் கைகொடுக்க, இந்திய அணி 9 விக்கெட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா தொடரை 2-0 என கைப்பற்றியது. இன்று மூன்றாவது, கடைசி போட்டி சிட்னியில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது.
ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் மிட்சல் மார்ஷ் (41), ஹெட் (29) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. ஷார்ட் 30, ரென்ஷா 56 ரன் எடுத்தனர். இதன் பின் இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். கேரி (24), கொனாலி (23) நிலைக்கவில்லை. மற்றவர்கள் ஏமாற்ற, ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவரில் 236 ரன்னில் ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் ஹர்ஷித் ராணா 4, வாஷிங்டன் 2 விக்கெட் சாய்த்தனர்.
அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, கேப்டன் சுப்மன் கில் (24) ஜோடி வேகமான துவக்கம் தந்தது. அடுத்து வந்த கோலி அரைசதம் அடித்தார். மறுபக்கம் மிரட்டிய ரோகித் ஒருநாள் அரங்கில் 33வது சதம் அடித்தார். இந்திய அணி 38.3 ஓவரில் 237/1 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இருப்பினும் தொடரை 1-2 என இழந்தது.
ரோகித் (121), கோலி (74) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement